கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி சக்கபோடு போடும் சீரியல் “திருமதி செல்வம்”. குடும்பம்னாலே பாசம், பந்தம், சண்டைலாம் இருக்க தான செய்யும்.அப்படி குடும்பத்துல நடக்குற அத்தனை அம்சங்களையும், குடும்பங்களை கவரும் விதமாக குமரன் இந்த தொடரை டைரக்ட் பண்ணிருக்காரு.
தன்னோட குடும்பம் மேல பாசமா இருக்குற செல்வமும், தன்னோட அம்மாவுக்காக எதையுமே செய்ய துணியுற அர்ச்சனாவும் குடும்ப வாழ்க்கையில இணையுறாங்க. தாம்பத்ய வாழ்க்கையில இணையாத இவங்க ரெண்டு பேரும், ஒருத்தர ஒருத்தர் புரிஞ்சுக்குற நேரத்துல குடும்ப பிரச்சனையால பிரிய வேண்டிய சூழல் வருது.
ஒரு கட்டத்துல செல்வம் தன்னோட பையன் இல்லை என்கிற உண்மைய அவங்க அம்மா சொல்றத கேட்டு உடைஞ்சு போறாரு செல்வம். அவர தேத்தி விடுற அர்ச்சனா செல்வத்துக்கூட சேர்ந்து வாழ ஆரம்பிக்கிறாங்க. இப்படி பல திருப்பங்களோட, இவங்களோட வாழ்க்கையில நடக்கிற விறுவிறுப்பான விஷயங்கள் அடுத்தடுத்து ஒளிபரப்பாகிட்டு வருது.
திங்கள் முதல் சனிக்கிழமை வரை இரவு 9:00 மணிக்கு கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் இந்த தொடரில் செல்வமாக சஞ்சீவ்வும், அர்ச்சனாவாக அபிதாவும் நடிக்கின்றனர் .மேலும் வடிவுக்கரசி, சூரி, தீபக் தின்கர், பிரியா உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.