Saturday, October 12
Shadow

அர்ச்சனாவின் நகைகள் போலியானது எப்படி? திருப்பங்களுடன் “திருமதி செல்வம்”

கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் “திருமதி செல்வம்” நெடுந்தொடருக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வரும் நிலையில், தற்போது இந்த தொடரில் பல்வேறு முக்கிய திருப்பங்கள் வருவதால் தொடர் விறுவிறுப்பாக நகர்ந்து வருகிறது.

இன்ஜினியர் என்று சொல்லி அர்ச்சனாவை திருமணம் செய்து கொள்ளும் செல்வம் மீது கோபத்தில் இருக்கிறார் அர்ச்சனா. செல்வம் மீதான கோபத்தால், தாம்பத்திய வாழ்க்கையில் இருந்து விலகி இருக்கும் அர்ச்சனாவுக்கு, புகுந்த வீட்டில் பெரும் சிக்கல் வருகிறது. தனது நகையை செல்வம் வீட்டார் கேட்க, முதலில் மறுத்து பின்னர் கொடுக்கும் அர்ச்சனா, அந்த நகையில் ஒருபாதி போலி என்பதை கேட்டு அதிர்ச்சியடைகிறாள்.

அர்ச்சனாவின் நகைகள் போலியானது எப்படி? இந்த பிரச்சனையை அர்ச்சனா எப்படி எதிர்கொள்கிறாள்? என்பது விரைவில் தெரிய வரும் என்பதால் தொடர் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது.

கலைஞர் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனிக்கிழமை வரை இரவு 9:00 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் இந்த தொடரில்செல்வமாக சஞ்சீவ்வும்அர்ச்சனாவாக அபிதாவும் நடித்துள்ளார்கள். மேலும் இதில் வடிவுக்கரசி, சூரி, தீபக் தின்கர், பிரியா உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். விகடனின் இந்த பிரம்மாண்ட தொடரை ச.குமரன் இயக்கியிருக்கிறார்.