Monday, October 14
Shadow

கமலின் அறிவும் அன்பும்

கரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்துள்ளதால் ஊரடங்கு உத்தரவை மே 3-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. வீட்டிலேயே அடங்கிக்கிடக்கும் மக்களுக்கு இது ஒரு பெரும் பாதிப்பாகவும், அச்சமாகவும், சவாலாகவும் உள்ளது. இதனால் வீட்டில் அடங்கியிருக்கும் மக்களின் தன்னம்பிக்கையை உயர்த்தவும், பாஸிட்டிவிட்டியை கூட்டவும் நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் பாடல் ஒன்றை எழுதியுள்ளார்.

 

இந்தப் பாடலை ஜிப்ரான் இசையமைக்க கமலுடன் இணைந்து அனிருத், யுவன் ஷங்கர்ராஜா, தேவிஸ்ரீ பிரசாத், ஷங்கர் மகாதேவன், ஸ்ருதி ஹாசன், பாம்பே ஜெயஸ்ரீ, சித்தார்த், லிடியன், ஆண்ட்ரியா, சித் ஸ்ரீராம், முகென் ஆகியோர் பாடியுள்ளனர். இந்தப் பாடலை திங்க் மியூசிக் நிறுவனம் தனது யூட்யூப் சேனலில் நாளை வெளியிடுகிறது.

இந்நிலையில் கமல்ஹாசன் நேற்று தனது ட்விட்டர் பக்கத்தில் இந்தப் பாடலின் வரிகளை வெளியிட்டிருந்தார். தற்போது இந்தப் பாடலை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இப்பாடலுக்கு ‘அறிவும் அன்பும்’ என்று பெயரிடப்பட்டுள்ளது.