Tuesday, March 21
Shadow

இலக்கியத் திறனாய்வாளர் கொடைக்கானல் காந்தி அவர்களின் நூல் வெளியீட்டு விழா

சென்னை திருவல்லிக்கேணி பாரதியார் இல்ல அரங்கில், 03.07.2022 அன்று மருத்துவர் ஆலோசனை மாத இதழ் மற்றும் கைத்தடி பதிப்பகம் இணைந்து நடத்தும் சுரக்காய் சித்தர் சுவாமிகள் “தாத்தா” அவர்களின் நினைவு போற்றுதல் விழா, கைத்தடி பதிப்பகத்தின் சார்பாக இலக்கியத் திறனாய்வாளர் கொடைக்கானல் காந்தி அவர்களின் இரு நூல்கள் பாரதியார் பற்றிய “தனிப்பாட்டுக்காரன்” நூல், தோழமை இலக்கியம் பேசிடும் நூல் இன்பா..! இன்பா..! நூல் மற்றும் சுரக்காய் சித்தர் தாத்தா அவர்களைப் பற்றி ஏ.என். கௌதமன் எழுதிய வரலாற்று (திருத்திய பதிப்பு ) நூல் வெளியீடு விழா மற்றும் சுவாமி பாடல்கள் ஒலி நாடா வெளியீடு விழா நடைபெற்றது.

 

விழாவில் மகாகவி பாரதியார் பற்றிய தனிப்பாட்டுக்காரன் நூலினை நீதியரசர் டாக்டர்.ப.ஜோதிமணி அவர்கள் வெளியிட பொறியாளர் பன்னீர் இராமச்சந்திரன் அவர்கள் பெற்றுக்கொண்டார்.

 

“யோகா – தியானம்” நூலினை தமிழ்நாடு வாடகை ஊர்தி உரிமையாளர்கள் சங்க தலைவர் டாக்டர் எஸ்.இ.அருளானந்தம் வெளியிட பாக்கியம் சினிமா ஆசிரியர் விண்ஸ்டார் விஜய் முருகன் அவர்கள் பெற்றுக்கொண்டார்.