Thursday, June 1
Shadow

லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா 20 லட்சம் உதவி

கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க நாடெங்கிலும் ஊரடங்கு உத்தரவு போடப்பட்டுள்ளது. ஏப்ரல் 14-ஆம் தேதி வரை ஊரடங்கு அமலில் இருக்கும்.

இந்தியாவைப் பொறுத்தவரை இதுவரை 3000 பேருக்கு மேல் இந்த வைரஸின் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

வெளியே செல்ல முடியாத சூழ்நிலையால் ஒட்டு மொத்த மக்களின் வாழ்வதாரம் முடங்கியுள்ளது.

வணிக நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன. தெருக்கள் வெறிச்சோடி கிடக்கின்றன.

சினிமா சூட்டிங்குகள் நிறுத்தப்பட்டுள்ளன. இதனால் தினக்கூலியை நம்பியுள்ள பெப்சி தொழிலாளர்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் ஃபெஃப்சி தொழிலாளர்களின் நலனுக்காக நடிகை நயன்தாரா ரூ.20 லட்சம் நிதியுதவி வழங்கியுள்ளார்.

தென்னிந்திய திரைப்பட தொழிலாளர் கூட்டமைப்பு தலைவர் ஆர்கே. செல்வமணியின் வேண்டுகோளை ஏற்று நடிகை நயன்தாரா நிதியுதவி வழங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.