Sunday, December 8
Shadow

LIONA & LEO Pictures – Launch of New Production House in Kollywood – John Amalan

நான் விரும்பியது போல் ‘இந்தியன் மீடியா ஒர்க்ஸ்’ மூலம் விஜய் சாருக்கு விருது வழங்குவேன் – தயாரிப்பாளர் ஜான் அமலன் அறிவிப்பு

நடிப்பை விட்டுவிட்டு அரசியலுக்கு போனாலும் நான் என்றுமே விஜய் சாரின் ரசிகன் தான்! – ’இந்தியன் மீடியா ஒர்க்ஸ்’ உரிமையாளர் நெகிழ்ச்சி

3 வது ’இந்தியன் விருதுகள் 2024’ (INDIAN AWARDS 2024) – டிசம்பர் 21,22 ஆம் தேதிகளில் சென்னையில் நடைபெறுகிறது

3 வது ‘இந்தியன் விருதுகள் 2024’ நிகழ்ச்சியுடன் நடைபெறும் ‘Mr Miss & Mrs தமிழகம்’ அழகிப் போட்டி

சினிமாத் துறையில் கால் பதிக்கும் ‘இந்தியன் மீடியா ஒர்க்ஸ்’-ன் புதிய தயாரிப்பு நிறுவனத்தை அறிமுகம்!

கோலிவுட்டின் புதிய திரைப்பட தயாரிப்பு நிறுவனம் ’லயோனா & லியோ பிக்சர்ஸ்’ (LIONA & LEO Pictures)! – பத்திரிகையாளர்கள் முன்னிலையில் அறிமுகமானது

வாழ்க்கையில் பல்வேறு சாதனைகள் படைக்க வேண்டும் என்பதை தான் ஒவ்வொருவரும் லட்சியமாக கொண்டு பயணிப்பார்கள். ஆனால், சாதனைப் படைத்தவர்களையும், உழைப்பால் உயர்ந்தவர்களையும் அங்கீகரித்து மக்களின் வெளிச்சத்தில் அவர்களை மிளிரச் செய்ய வேண்டும், என்பதையே லட்சியமாக கொண்டு ஒருவர் பயணித்திருக்கிறார்.

ஆம், தனிமனித எதிர்காலத்தைப் பற்றி சிந்திக்கும் இவ்வுலகில், மற்றவர்களைப் பற்றி சிந்தித்ததோடு, சாதனையாளர்களை அங்கீகரித்து கெளரவிக்க வேண்டும் என்பதை சிந்தித்துக்கொண்டிருந்தவர் தான் திரு.ஜான் அமலன். திரைத்துறை மட்டும் இன்றி தொழில், விளையாட்டு, அரசியல், மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சாதித்தவர்களை கண்டறிந்து அவர்களுக்கு விருது வழங்கி கெளரவிக்க வேண்டும், என்பதை கனவாக கொண்டிருந்தவர், ’இந்தியன் மீடியா ஒர்க்ஸ்’ (INDIAN MEDIA WORKS) என்ற நிறுவனத்தை ஆரம்பித்து, அதன் மூலம் ‘இந்தியன் விருதுகள் ‘ (INDIAN AWARDS) என்ற பெயரில் பல்வேறு துறைகளைச் சேர்ந்தவர்களுக்கு விருது வழங்கி கெளரவித்து வருகிறார்.

இரண்டு வருடங்களுக்கு ஒரு முறை நடைபெறும் ‘இந்தியன் விருதுகள் ’ (INDIAN AWARDS) நிகழ்ச்சியின் 3 வது சீசன் வரும் 2024, டிசம்பர் 21,22 ஆகிய தேதிகளில் இரண்டு நாட்கள் நிகழ்வாக, சென்னை, சேத்துபட்டில் உள்ள ‘லேடி ஆண்டாள்’ அரங்கில் நடைபெறுகிறது. இதில், சினிமாத்துறையில் சிறந்த நடிகர், நடிகை, இயக்குநர், ஒளிப்பதிவாளர், இசையமைப்பாளர் உள்ளிட்ட 60 பிரிவுகளின் கீழ் விருதுகள் வழங்கப்படுகிறது. மேலும், அரசியல், தொழில், விளையாட்டு, மருத்துவம், கல்வி, ராணுவம், காவல்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் 30 பிரிவுகளில் விருதுகள் வழங்கப்படுகிறது.

மேலும், இறந்தும் மக்கள் மனதில் வாழ்ந்துக் கொண்டிருக்கும் நடிகரும், அரசியல் தலைவருமான திரு.விஜயகாந்த் அவர்களின் நினைவாக ‘கேப்டன் விஜயகாந்த்’ என்ற பெயரில் சினிமாத்துறையில் சாதித்தவர்களுக்கு விருது வழங்கப்பட உள்ளது. அதேபோல், சினிமாத்துறையில் கடந்த 40 ஆண்டுகளாக மக்கள் தொடர்பாளராக பணியாற்றிக் கொண்டிருக்கும் திரு.டைமண்ட் பாபு அவர்களின் 40 வது திரையுலக வாழ்க்கையும் கொண்டாடப்படுகிறது.

விருதுகள் வழங்குவது மட்டும் இன்றி இந்திய ராணுவத்தில் பணியாற்றி உயிர் நீத்த ராணுவ வீரர்களின் குடும்பங்கள் மற்றும் ஏழை எளிய சிறுவர்களுக்கு நிதி உதவி வழங்க இருக்கும் இந்தியன் மீடியா ஒர்க்ஸ் நிறுவனம், இத்தகைய பணியை தமிழக அரசு வழிகாட்டுதல்படி செய்கிறது.

‘இந்தியன் விருதுகள் 2024 ’ (INDIAN AWARDS 2024) நடைபெறும் அதே மேடையில், இந்திய அளவில் மிக முக்கியமான அழகுப் போட்டியான ’Mr Miss & Mrs தமிழகம் 2024 – சீசன் 4’ நடைபெற உள்ளது.

3வது ஆண்டாக ‘இந்தியன் விருதுகள் 2024 ’ நிகழ்ச்சியை வெற்றிகரமாக நடத்தும் ’இந்தியன் மீடியா ஒர்க்ஸ்’ (INDIAN MEDIA WORKS) நிறுவனம், கடந்த மூன்று வருடங்களாக ’Mr Miss & Mrs தமிழகம்’ அழகுப் போட்டியை வெற்றிகரமாக நடத்தி வருகிறது. குறிப்பாக தென்னிந்தியாவைச் சேர்ந்த ஒரு நிறுவனம், வட இந்தியாவில் இத்தகைய அழகுப் போட்டியை வெற்றிகரமாக நடத்துவது என்பது சாத்தியமில்லாத ஒன்றாக இருந்த நிலையை, தனது இந்தியன் மீடியா ஒர்க்ஸ் நிருவனம் மூலம் மாற்றியிருக்கும் திரு.ஜான் அமலன், அவர்கள் கோவாவில் சொகுசு கப்பலில் இந்த அழகுப் போட்டியை இரண்டு முறை நடத்தி ஒட்டு மொத்த இந்தியாவையும் திரும்பி பார்க்க வைத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

விருது விழா, அழகுப் போட்டிகள் ஆகியவற்றை தனது தொலைநோக்கு பார்வையின் மூலம் வித்தியாசமாக நிகழ்த்தி மீடியா மற்றும் பொழுதுபோக்குத் துறையின் கவனம் ஈர்த்த திரு.ஜான் அமலன், அவர்கள் தற்போது திரைத்துறையில் தயாரிப்பாளராகவும் கால்பதிக்கிறார். இதற்காக ’லயோனா & லியோ பிக்சர்ஸ்’ (LIONA & LEO Pictures) என்ற பெயரில் தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கியிருப்பவர், இந்நிறுவனம் மூலம் பல தரமான மற்றும் வித்தியாசமான திரைப்படங்களை தயாரிக்க இருக்கிறார்.

பெண் சிங்கம் மற்றும் ஆண் சிங்கம் என்ற அர்த்தம் கொண்ட ’லயோனா & லியோ பிக்சர்ஸ்’ (LIONA & LEO Pictures) நிறுவனத்தின் அறிமுக விழா இன்று (நவம்பர் 25) சென்னை, சாலிகிராமத்தில் உள்ள பிரசாத் லேப் திரையரங்கில் நடைபெற்றது.

’லயோனா & லியோ பிக்சர்ஸ்’ (LIONA & LEO Pictures) நிறுவனம் தயாரிக்க இருக்கும் முதல் திரைப்படத்தைப் பற்றிய தகவல்கள் 2024, டிசம்பர் 21,22 ஆகிய தேதிகளில் நடைபெறும் ‘இந்தியன் விருதுகள் 2024’ நிகழ்ச்சியில் அறிவிக்கப்படும்.

விருதுக்குரியவர்களை தேர்வு செய்வதற்காக சினிமா, தொழில், அரசியல் உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சேர்ந்த 5 பேர் கொண்ட தேர்வுக் குழு அமைக்கப்பட்டுள்ளது. இவர்கள் மூலம் தேர்வு செய்யப்படுகிறவர்கள் பற்றிய மக்கள் கருத்து, அவர்கள் பற்றி சமூக வலைதளப்பங்களில் வெளியாகும் விமர்சனங்கள் மற்றும் கருத்துகள் உள்ளிட்டவைகளை வைத்து இறுதிப் பட்டியல் தேர்வு செய்யப்படுகிறது.

விருது நிகழ்ச்சி உள்ளிட்ட பொழுதுபோக்கு நிகழ்வுகளை வெற்றிகரமாக நடத்தி வரும் ’இந்தியன் மீடியா ஒர்க்ஸ்’ நிறுவனர் திரு.ஜான் அமலன், சினிமாத்துறையில் தயாரிப்பாளராக கால்பதிப்பது பற்றி கூறுகையில், “நான் கல்லூரி படிக்கும் போதே, சினிமா பிரபலங்கள் மற்றும் பிறத்துறைகளில் சாதிப்பவர்களுக்கு விருது வழங்க வேண்டும் என்று நினைத்தேன். அதற்காக ஒரு நிறுவனத்தை ஆரம்பித்து அவர்களை மிகப்பெரிய அளவில் கெளரவிக்க வேண்டும் என்பது தான் என் ஆசை. குறிப்பாக நடிகர் விஜய் அவர்களுக்கு என் கையால் விருது வழங்க வேண்டும் என்று ஆசைப்பட்டேன். நான் தீவிர விஜய் ரசிகர் என்பதால் இதை என் லட்சியமாக கூட வைத்திருந்தேன். கல்லூரி முடித்த பிறகு என் ஆசை என்னை தொடர்ந்ததால், இத்துறையை என் எதிர்காலமாக எடுத்துக்கொண்டேன். அதன்படி, ’இந்தியன் மீடியா ஒர்க்ஸ்’ என்ற நிறுவனத்தை ஆரம்பித்து அதன் மூலம் ‘இந்தியன் விருதுகள்’ என்ற பெயரில் இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை சினிமா உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சேர்ந்த சாதனையாளர்களுக்கு விருது வழங்கி வருவதோடு, அழகுப் போட்டிகளையும் வெற்றிகரமாக நடத்தி வருகிறேன். தென்னிந்தியாவைச் சேர்ந்த ஒரு நிறுவனம் வட இந்தியாவில் அழகுப் போட்டியை நடத்த முடியும் என்பதை முதலில் நிகழ்த்திக் காட்டியது நான் தான்.

விருது விழா மற்றும் அழகுப் போட்டி ஆகியவற்றுடன் நின்றுவிடாமல் இப்போது திரைத்துறையில் தயாரிப்பாளராகவும் கால் பதிக்கிறேன். ’லையோனா & லியோ பிக்சர்ஸ்’ (LIONA & LEO Pictures) நிறுவனம் சார்பில் திரைப்படங்கள் தயாரிக்க இருக்கிறேன். திறமை மிகு இயக்குநர்கள், நடிகர்கள், நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினருக்கும் வாய்ப்பு வழங்க வேண்டும் என்பது தான் எங்கள் நோக்கம். அதேபோல், நாங்கள் தயாரிக்கும் திரைப்படங்கள் குறைந்த முதலீட்டில், தரமான மற்றும் வித்தியாசமான படைப்பாகவும் இருக்கும்.

நாங்கள் தயாரிக்கும் முதல் படத்திற்கான கதை தேர்வில் தற்போது ஈடுபட்டுள்ளோம். எங்கள் முதல் படம் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை என அனைத்து தரப்பினரும் ஜாலியாக பார்க்க கூடிய பொழுதுபோக்கு படமாக மட்டும் இன்றி, அனைத்து வயதினரையும் தொடர்பு படுத்தும் ஒரு திரைப்படமாகவும் இருக்கும். அப்படம் பற்றிய மற்ற தகவல்கள் இந்தியன் விருதுகள் 2024 நிகழ்ச்சி மேடையில் அறிவிக்கப்படும்.” என்றார்.

நடிகர் விஜய்க்கு விருது வழங்க வேண்டும் என்று ஆசைப்பட்டீர்கள், ஆனால் அவர் நடிப்பை விட்டுவிட்டு அரசியலுக்கு சென்றுவிட்டாரா..?

விஜய் அவர்கள் அரசியலுக்கு சென்றாலும், நான் அவரது ரசிகன் தான், அதில் எந்த மாற்றமும் இல்லை. அவர் நடிகராக இருக்கும் போது அவருக்கு விருது வழங்க வேண்டும், என்று ஆசைப்பட்டேன். அந்த ஆசை தான் என்னை இந்த துறையில் பயணிக்க வைத்திருக்கிறது. அதேபோல், அவர் சினிமாவில் இல்லை என்றாலும் எதிர்காலத்தில் சிறந்த அரசியல் தலைவராக அவருக்கு நான் விருது வழங்குவேன், என்று நம்புகிறேன். அதற்கான உயரத்தை அடைய நானும், என் நிறுவனமும் கடுமையாக உழைப்போம்.” என்றார்.

“Just as I wished, I will definitely honour Vijay sir through ‘Indian Media Works’” – Producer John Amalan

“I will be a hardcore Vijay fan forever even after he leaves film industry and enters politics” – Producer John Amalan

New Category of Special Honours “Captain Vijayakanth Award” to be included from 3rd Indian Awards 2024

3rd Indian Awards 2024 to take place on December 21 & 22

Mr Miss & Mrs Thamizhagam to take place along with 3rd Indian Awards 2024

LIONA & LEO Pictures – Launch of New Production House in Kollywood!

In today’s contemporary world, individuals often embark on their journeys to achieve various accomplishments in life. One person has dedicated their life to recognising and celebrating those who have succeeded through hard work, making it their mission to highlight these individuals in the public eye.

Indeed, in a world where individuals contemplate their future, Mr John Amalan has been reflecting on the importance of identifying and honouring achievers, alongside considering the welfare of others. He envisions a society that acknowledges individuals who have excelled not only in the film industry but also across various fields such as business, sports, politics, and medicine. To realise this dream, he established the organization INDIAN MEDIA WORKS, actively presenting awards under the banner of INDIAN AWARDS to honour those who have made significant contributions in diverse sectors.

The third season of the INDIAN AWARD, which takes place biennially, is scheduled for December 21 and 22, 2024. The event will be held at the ‘Lady Aandal’ auditorium in Chetpet, Chennai. Awards will be presented in 60 categories, recognising excellence in the film industry, including Best Actor, Best Actress, Best Director, Best Cinematographer, and Best Music Composer. Additionally, awards will be conferred in 30 categories across various fields such as politics, business, sports, medicine, education, military, and law enforcement.

Furthermore, in memory of the late actor and political leader Mr Vijayakanth, an award will be presented in his honour under the name ‘Captain Vijayakanth’ to those who have excelled in the film industry. Similarly, the 40-year career of Mr. Diamond Babu, who has served as a public relations officer in the film industry for the past four decades, will also be celebrated.

The Indian Media Works organization, which provides financial assistance to the families of military personnel who have served in the Indian Army and lost their lives, as well as to underprivileged children, conducts this work under the guidance of the Tamil Nadu government, in addition to awarding honours.

The prestigious Mr, Miss & Mrs Tamil Nadu 2024 – Season 4 beauty pageant will take place on the same stage and occasion of the INDIAN AWARDS 2024.

The company INDIAN MEDIA WORKS has successfully organised the ‘Indian Awards 2024’ event for the third consecutive year. Over the past three years, it has also been conducting the ‘Mr, Miss & Mrs Tamil Nadu’ beauty pageant with great success. Notably, Mr. John Amalan has transformed the perception that a South Indian company could not successfully host such beauty contests in North India through his organization. It is worth mentioning that he has held this beauty pageant twice on a luxury ship in Goa, drawing attention from across India.

Mr. John Amalan has distinguished himself in the media and entertainment industry by uniquely organising award ceremonies and beauty pageants through his visionary approach. He is now making his mark as a producer in the film industry. Significantly, he has established a production company named ‘Liona & Leo Pictures,’ through which he aims to produce a variety of high-quality and innovative films.

The launch event of this new production house ‘LIONA & LEO PICTURES’ symbolising the names of Lion and Lioness, happened today (November 25) at Prasad Lab, Saligramam in Chennai. The official announcement on the production house’s maiden venture will be officially revealed during the grand event of Indian Awards 2024, scheduled on December 21 & 22.

A selection committee consisting of five individuals from various fields such as cinema, industry, and politics has been established to choose the award recipients. The final list of nominees is determined based on public opinion, as well as critiques and comments that emerge on social media regarding the candidates.

The founder of ‘Indian Media Works’, Mr. John Amalan, who has been successfully organising entertainment events including award ceremonies, shared his thoughts on entering the film industry as a producer. He stated, “While I was still in college, I envisioned the need to honor film personalities and achievers from various fields with awards. My aspiration was to establish a company that would recognise them on a grand scale. I particularly wished to present an award to actor Vijay, as I have been a devoted fan of his. This ambition became a personal goal for me. After completing my college education, my passion led me to pursue this industry as my future. Consequently, I founded ‘Indian Media Works’ to realise this vision.

I am now stepping into the film industry as a producer, in addition to my previous roles in award ceremonies and beauty pageants. I will be producing films under the banner of ‘LIONA & LEO Pictures.’ Our aim is to provide opportunities to talented directors, actors, actresses, and technical artists from all backgrounds. Furthermore, the films we produce will be characterised by top-notch quality and uniqueness, all while maintaining a low investment.

We are currently engaged in the selection of a story for our maiden production. Our first movie will not only be an entertaining piece suitable for audiences of all ages, from children to adults, but it will also serve as a film that connects with viewers across different age groups. We will making other announcements pertaining to this project during the Indian Awards 2024 event.”

When asked about his desire to honour actor Vijay, who is now bidding adieu to the film industry due to his embarkation of political journey, producer Mr. John Amalan sums up adding, “Actor Vijay sir may have entered politics, but my admiration for him remains unchanged. I had always wished to see him receive awards during his acting career, and that aspiration has motivated my journey in this field. Similarly, even if he is not currently in the film industry, I believe that in the future, I will have the opportunity to present him with an award as an outstanding political leader. Both my organization and I will work diligently to help him reach that level of achievement.”