Saturday, November 2
Shadow

Madras Studios & Anshu Prabhakar Films presents,Filmmaker Igore directorial, Hansika Motwani starrer “Man”.

Madras Studios & Anshu Prabhakar Films presents,Filmmaker Igore directorial,
Hansika Motwani starrer “Man”.

Production house Madras Studios, has churned out remarkable Tamil films like 96, Romeo Juliet, Kalaba Kadhalan, and many is currently producing a film Anshu Prabhakar films, featuring Hansika Motwani in the lead role. The film titled ‘Man’, is directed by Igore (Kalaba Kadhalan fame), and features Aari Arjunan as the villain for the first time.

Sharing the reason behind titling this film ‘Man’, director Igore says, “Manhood or Manliness has become an egoistic element. Precisely, it has developed a fake identification, a male chauvinist ideology that is all about confronting and dominating women. This is the reason behind the title ‘Man’, which involves the rebellious battle of a woman against this very nature. Hansika Motwani has delivered an excellent performance in this film, and the audience will experience a never-seen-before Hansika. Aari Arjunan plays the antagonist in this film, and his dedication and performance is so extraordinary. It takes a lot of guts on his part to play such a negative role”

Man is an edge-of-seat, scary psychological thriller that features a musical score by Ghibran and cinematography by Manikandan, who worked as assistant DOP in ‘96’. Sharanya Bhagyaraj has written a screenplay that will keep the audiences glued to the screens from the beginning till the end. Pon Parthiban has penned very intense dialogues for the film. The action sequences of the film have been handle by Stunt Directors Knife Naren & Prabhu.

Director Igore has attempted incorporating the elements of Sigmund Freud’s theory involving the psychology behind the egoistic concept of ‘Manhood’.

The shooting of the final schedule of ‘Man’ is in progress.

மெட்ராஸ் ஸ்டுடியோஸ் & அன்ஷு பிரபாகர் பிலிம்ஸ் வழங்கும்
இகோர் இயக்கத்தில்,
ஹன்சிகா மோத்வானி நடித்துள்ள படம் ’மேன்’

’96’, ’ரோமியோ ஜூலியட்’, ’கலாப காதலன்’ போன்ற குறிப்பிடத்தக்க தமிழ்ப் படங்களை மெட்ராஸ் ஸ்டுடியோஸ் தயாரிப்பு நிறுவனம் தயாரித்துள்ளது. தற்போது, அன்ஷு பிரபாகர் ஃபிலிம்ஸ், ஹன்சிகா மோத்வானி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் ‘மேன்’ படத்தைத் தயாரித்து வருகிறது. இகோர் (’கலாப காதலன்’ படப்புகழ்) இயக்கி வரும் இப்படத்தில் ஆரி அர்ஜுனன் முதல்முறையாக வில்லனாக நடிக்கிறார்.

இந்தப் படத்துக்கு ‘மேன்’ என்று தலைப்பு வைத்ததன் காரணத்தைப் பகிர்ந்துகொண்ட இயக்குநர் இகோர், “ஆண்மை என்பது ஒரு அகங்காரக் கூறாக மாறிவிட்டது. இது ஒரு போலி அடையாளத்தை உருவாக்கியுள்ளது. மேலும், இது பெண்களை அடக்கி, ஆதிக்கம் செலுத்துவது போன்ற ஒரு பிம்பத்தையும் கட்டமைத்துள்ளது. இந்த இயற்கைக்கு எதிரான ஒரு பெண்ணின் கிளர்ச்சிப் போரை உள்ளடக்கியதே ‘மேன்’ என்ற தலைப்புக்குக் காரணம். ஹன்சிகா மோத்வானி இந்த படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். இதற்கு முன்பு பார்த்திராத ஹன்சிகாவை ரசிகர்கள் திரையில் பார்த்து ரசிப்பார்கள். ஆரி அர்ஜுனன் இந்த படத்தில் வில்லனாக நடிக்கிறார், அவருடைய அர்ப்பணிப்பு மற்றும் நடிப்பு மிகவும் அசாதாரணமானது. அத்தகைய எதிர்மறையான பாத்திரத்தில் நடிக்க அவருக்கு நிறைய தைரியம் தேவை” எனவும் கூறினார்.

’மேன்’ திரைப்படம் சீட்டின் நுனியில் பார்வையாளர்களை அமர வைக்கும் வகையிலான சைக்காலஜிக்கல் த்ரில்லர் திரைப்படம். ’96’ படத்தில் உதவி ஒளிப்பதிவாளராகப் பணிபுரிந்த மணிகண்டன் ஒளிப்பதிவு செய்கிறார் மற்றும் ஜிப்ரான் இசையமைக்கிறார். ஆரம்பம் முதல் இறுதி வரை பார்வையாளர்களை திரையில் ஒட்ட வைக்கும் திரைக்கதையை சரண்யா பாக்யராஜ் எழுதியுள்ளார். பொன் பார்த்திபன் படத்திற்கு மிக அழுத்தமான வசனங்களை எழுதியுள்ளார். படத்தின் ஆக்‌ஷன் காட்சிகளை ஸ்டண்ட் இயக்குனர்களான நைஃப் நரேன் மற்றும் பிரபு ஆகியோர் கையாண்டுள்ளனர்.

இயக்குநர் இகோர், சிக்மண்ட் பிராய்டின் கோட்பாட்டின் கூறுகளை உள்ளடக்கிய ‘ஆண்மை’ என்ற அகங்காரக் கருத்துக்குப் பின்னால் உள்ள உளவியலை வெளிக்கொண்டு வர முயற்சித்துள்ளார். தற்போது, ‘மேன்’ படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.