அருண் விஜய் தமிழ் சினிமாவில் மிக பெரிய போராட்டத்துக்கு பின் தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ளார் அதுவும் அஜித்தின் படத்தில் வில்லனாக நடித்த பிறகுதான் இவருக்கு ஒரு நடிகர் என்ற ஒரு அந்தஸ்து கிடைத்தது . இந்த வகையில் அவர் சினிமாவில் நுழைந்து இதோடு இருபத்தியைந்து வருடங்கள் ஆகிறது .
இந்த இருபாதியந்தாம் ஆண்டில் இவர் நடிக்கும் படம் ஒரு நல்ல கதையம்சம் கொண்ட படமாக இருக்கும் என்று எதிர்பார்த்தால் மிக மோசமான ஒரு படத்தை தேர்வு செய்து நடித்து இருக்கிறார் .அந்த படம் தான் மாபியா.
இந்தபடத்தில் அருண் விஜய்க்கு ஜோடியாக பிரியா பாவனி சங்கர் நடித்து இருக்கிறார் வில்லனாக நடிகர் பிரசன்னா மற்றும் பலர் நடிப்பில் ஜேக்ஸ் பிஜாய் இசையில் கோகுல் பினாய் ஒளிப்பதிவில் கார்த்திக் நரேன் ஒளிப்பதிவில் உருவாகியிருக்கும் படம் தான் மாபியா
இந்த சூழலில், போதை மருந்து தடுப்பு பிரிவில் இருக்கும் உயர் அதிகாரி ஒருவரும், அருண் விஜய்க்கு சில முக்கிய தகவல்களை தந்த சமூக ஆர்வலர் ஒருவரும் கொல்லப்படுகின்றனர். இதன்பிறகு தேடலை துரிதப்படுத்தும் அருண் விஜய் போதை மருந்து கடத்தல் மாஃபியாவின் பெரும் புள்ளியை கண்டுபிடித்தாரா? போதை மருந்து புழக்கத்தை ஒழித்தாரா? என்பதே படத்தின் மீதிக்கதை. அருண் விஜய் போதை மருந்து தடுப்பு பிரிவு அதிகாரியாக இருக்கிறார். அவரது குழுவில் பிரியா பவானி சங்கரும், ஒரு இளைஞரும் பணியாற்றுகின்றனர். சென்னையில் முக்கிய இடங்களில் அருண்விஜய் தலைமையிலான குழு திடீர் சோதனை நடத்துகிறது. இந்த சோதனையில் கல்லூரி மாணவர்களிடம் இருக்கும் போதை புழக்கத்தை கண்டறிகிறார் அருண் விஜய். அவரது இந்த சோதனையில் போதை மருந்து கடத்தும் சின்ன சின்ன ஆட்கள் மட்டுமே சிக்குகின்றனர். அவரால் பெரும் புள்ளிகளை நெருங்க முடியவில்லை.