Sunday, September 25
Shadow

கேப்டன் விஜயகாந்த் வீட்டில் நடந்த திருமணம்

கொரோனா வைரஸ் எதிரொலியால் திருமண மண்டபத்தில் நடைபெறவிருந்த தேமுதிக நிர்வாகியின் இல்லத் திருமணம் தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த் வீட்டில் நடைபெற்றது.

கொரோனா வைரஸ் பாதிப்பு இந்தியாவிலும் வேகமாக பரவி வருகிறது. அதனை தடுக்க மத்திய, மாநில அரசுகள் முழுவீச்சில் களமிறங்கியுள்ளன. இருப்பினும் கொரோனா எதிரொலியால் பலரது இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. அதிலும், சிலரது திருமண நிகழ்ச்சிகள் உறவினர்கள் கூட இன்றி நடந்து முடிந்திருக்கின்றன. தமிழகத்திலும் இதே நிலை தான்.

இந்நிலையில், சைதாப்பேட்டை திருமண மண்டபத்தில் நடைபெற இருந்த தேமுதிக நிர்வாகி ஒருவரது இல்லத் திருமணம் விஜயகாந்த் வீட்டில் நடைபெற்றது. விஜயகாந்த், பிரேமலதா, சுதீஷ் உள்ளிட்டோர் முன்னிலையில் இந்த நிகழ்ச்சி நடந்தது.

திருமண நிகழ்ச்சியின் புகைப்படங்களை ட்விட்டரில் பகிர்ந்துள்ள விஜயகாந்த், “விமல்-கமலி திருமணம் இன்று எனது தலைமையில் திருமணமண்டபத்தில் நடைபெறவிருந்தது. மத்திய அரசின் ஊரடங்கு உத்தரவை மதிக்கும் அதே வேளையில், மணமக்கள் பல்லாண்டு வாழவேண்டும் என்ற நல்ல நோக்கத்துடன், அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் எளிய முறையில், எனது இல்லத்தில் நடைபெற்றது” என தெரிவித்துள்ளார்.