Saturday, November 2
Shadow

ஆதரவளித்த மக்களுக்கு நன்றி – பிரதமர் மோடி

மக்கள் ஊரடங்குக்கு நாட்டு மக்கள் அளித்த ஒத்துழைப்பால் பிரதமர் மோடி மகிழ்ச்சி வெளியிட்டு உள்ளார். டெல்லி உள்ளிட்ட பகுதிகளில் சாலைகள் வெறிச்சோடி கிடந்த வீடியோக்களை தனது டுவிட்டரில் அவர் வெளியிட்டு சில கருத்துகளை பதிவிட்டு இருந்தார். அதில் அவர் கூறியிருந்ததாவது:-

கொரோனாவுக்கு எதிரான போரில் மக்களாகிய நீங்கள் ஒவ்வொருவரும் தான் மதிப்புமிக்க வீரர்கள். உங்களின் எச்சரிக்கையும், உஷார் நிலையும்தான் லட்சக்கணக்கான உயிர்களை பாதுகாக்கும்.

இந்த ஊரடங்கு இரவு 9 மணியுடன் முடியலாம். ஆனால் இதை கொண்டாட வேண்டும் என்று அர்த்தம் அல்ல. இதை ஒரு வெற்றியாக கருதக்கூடாது. ஒரு நீண்ட போராட்டத்தின் தொடக்கமாகவே கொள்ள வேண்டும்.

சமூக விலகலை உறுதி செய்வதற்கு இதுவே தகுந்த தருணம். மக்கள் ஊரடங்கால் மக்கள் தங்கள் குடும்பத்தினருடன் நேரம் செலவழிக்க முடியும், தொலைக்காட்சி பார்க்கவும், நல்ல உணவுகளை எடுத்து கொள்ளவும் முடியும்.என பிரதமர் மோடி கூறியிருந்தார்.

மேலும் கொரோனா வைரசுக்கு எதிரான பணிகளில் ஈடுபட்ட அனைவரையும் உற்சாகப்படுத்தும் வகையில் நாட்டு மக்கள் தங்கள் கைகளை தட்டி பாராட்டு தெரிவித்து இருந்ததற்கும் பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் நன்றி தெரிவித்துக் கொண்டார்.