பாலா, வெற்றிமாறன் வரிசையில் பாலுமகேந்திரா பட்டறையில் இருந்து மற்றொரு இயக்குனர் ஆர் பி சாய் இயக்கும் முதல் முத்தமே இறுதி முத்தம் படத்துவக்க விழா இன்று கோவையில் சிறப்பாக நடைபெற்றது…
இப்படத்தை ஜேசி மீடியா சார்பில் வசந்த குமார பிள்ளை மற்றும் K. N. முரளி கிருஷ்ணா தயாரிக்கிறார் இணை தயாரிப்பாளர்களாக மணிகண்டன், மகாதேவன் இணைந்துள்ளார்கள். இப்படத்திற்கு இசை மோகன்ராம் , ஒளிப்பதிவு ஹரிகாந்த், படத்தொகுப்பு பொன் மூர்த்தி , கலை இயக்குனர் மணி வர்மா, சண்டைப்பயிற்சி டைகர் காளி, நடனம் ராதிகா மற்றும் ட்ரீம்ஸ் காதர்.
இப்படத்தைப் பற்றி இயக்குனர் கூறுகையில்
அம்மாவுக்கு மகனுக்குமான பாசத்தை மையமாக வைத்து உருவாகும் படம் தான் முதல் முத்தமே இறுதி முத்தம் என்கிறார் இயக்குனர்.இந்த படத்தில் நாயகனாக விஷ்ணு பிரியனும் , நாயகியாக மேக்னா எலனும் நடிக்கிறார்கள்
இவர்களுடன் முக்கிய கதாபாத்திரத்தில் சாம் ஆண்டர்சன், ரோஹித் பாலையா, எஸ் கௌதம், ஜூனியர் டிஆர் மற்றும் பல முன்னணி நட்சத்திரங்கள் நட்சத்திரங்கள் நடிக்க உள்ளனர்.
இப்படத்தை பற்றி நடிகர் விஷ்ணுப்பிரியன் கூறுகையில்
நான் பாலுமகேந்திராவிடம் பணியாற்ற மிகவும் ஆசைப்பட்டேன் அந்த ஆசையை அவரது உதவி இயக்குனர் ஆர்.பி சாய் மூலம் இப்படத்தில் பணியாற்றுவதில் நிறைவேற்றிக் கொள்கிறேன் கோவையில் நடந்த சில உண்மை சம்பவங்களுடன் உருவாக்கப்பட்டுள்ளது என்றார்
இப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் சென்னை, கோவை, பொள்ளாச்சி போன்ற இடங்களில் படமாக்கப்பட உள்ளது