கதையின் நாயகன் சங்கை குமரேசன் நாடோடி வாழ்க்கை வாழும் கழைக்கூத்தாடி குடும்பத்தைச் சேர்ந்தவர். மற்றவர்களை போன்று தனது சமூகமும் நாகரீக வாழ்க்கைக்கு வர வேண்டும் என்று நினைக்கிறார். அதற்காக சிறு வயதிலேயே பெற்றோர்களை எதிர்த்து அக்கூட்டத்தில் இருந்து வெளியேறுகிறார். கோடீஸ்வரனாக வேண்டும் என்ற கனவோடு இருக்கும் இவருக்கு எதிர்பாராத விதமாக லாட்டரி மூலம் கோடீஸ்வரர் ஆகிறார். இவரது தந்தை இவரை ஏற்க மறுக்கிறார். இதனையடுத்து திருமணம் செய்யும் இவர் வாழ்க்கை என்ன ஆனது என்பதே படத்தின் மீதிக்கதை.
கதாநாயகனாக நடித்திருக்கும் சங்கை குமரேசன் நடிப்பு இயல்பாக இருக்கிறது. தோற்றமும் கதாப்பாத்திரத்திற்கு கச்சிதமாக பொருந்துகிறது. நாயகனின் தங்கையாக நடித்திருக்கும் நியா கிருஷ்ணன், கொடுத்த வேலையை சரியாக செய்திருக்கிறார்., காதல் மற்றும் நடனக் காட்சிகளில் கவனிக்க வைக்கிறார்.
நாயகனின் அப்பாவாக நடித்திருக்கும் ராஜு, அம்மாவாக நடித்திருக்கும் சிந்து, நாயகனின் நண்பர் வேடத்தில் நடித்திருக்கும் நடன இயக்குநர் கென்னடி, ரம்யா உள்ளிட்ட படத்தில் நடித்த அனைவரும் அவர்களுக்கு கொடுத்த வேலையை கச்சிதமாக செய்திருக்கிறார்கள்.
டி.ஏ.வசந்தின் இசையில் பாடல்கள் சிந்திக்கும்படியும் உள்ளது. சுனில் லாசரின் பின்னணி இசை கதைக்கு ஏற்ற விதத்தில் இருக்கிறது. ஒளிப்பதிவாளர் ரவி கதைக்கு ஏற்ப ஒளிப்பதிவு செய்திருப்பதோடு, பாடல் காட்சிகளை படமாக்கிய விதம் அருமை
மக்கள் அறிந்துக்கொள்ளக் கூடிய நல்ல விஷயத்தை நேர்மையான முறையில் சொல்லி இருக்கிறார். இயக்குநர் சங்கை குமரேசன் நாடோடிகளாக வாழும் கழைக்கூத்தாடிகளின் துயர வாழ்க்கையை அழுத்தமாக பதிவு
செய்திருக்கிறார்., அவர்களிடம் இருக்கும் நேர்மை மற்றும் நற்பண்புகளையும் அழகாக எடுத்து சொல்லி இருக்கிறார்.
மொத்தத்தில் “ முன்னா “ கழைக்கூத்தாடிகளின் வாழ்க்கை சொல்லும் படம் .
நடிகர்கள், நடிகைகள்
சங்கை குமரேசன் ( முன்னா )நியா கிருஷ்ணா ( ஹீரோ தங்கை ), ரம்யா(சங்கீதா), ராஜு ( ஹீரோ அப்பா ), சிந்து( சக்கு ),கென்னடி( தண்ணிபாம்பு முருகன் ), சண்முகம்,வெங்கட்
தொழில்நுட்ப கலைஞர்கள்
தயாரிப்பு – ஸ்ரீ தில்லை ஈசன் பிக்சர்ஸ் (ராமுமுத்துச்செல்வன்)
பாடல்களுக்கான இசை – D.A.வசந்த்தும்.
பின்னணி இசை – சுனில் லாசர்.
ஒளிப்பதி – ரவி
நடனம் – கென்னடி எடிட்டிங் – பத்மராஜ்
மக்கள் தொடர்பு – மணவை புவன்
கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள், இயக்கம் – சங்கை குமரேசன்