Friday, June 2
Shadow

National award-winning filmmaker Vasantha Balan presents,Debutant Ramesh Pazhaniivel directorial,Sachin-Abarnathi starrer “Demon” First Look is out now!!!

தேசியவிருது பெற்ற இயக்குநர் வசந்தபாலன் வழங்கும், அறிமுக இயக்குநர் ரமேஷ் பழனிவேல் இயக்கத்தில் சச்சின் – அபர்நிதி நடிக்கும் ‘Demon’ படத்தின் முதல் பார்வை வெளியானது!

சஸ்பென்ஸ் – த்ரில்லருடன் ஹாரர் எலிமெண்ட்ஸூம் சேர்ந்து உருவாகி இருக்கும் ‘Demon’ படத்தின் முதல் பார்வையை நடிகர் விஜய்சேதுபதி & இயக்குநர் மிஷ்கின் வெளியிட்டுள்ளனர். தேசியவிருது வென்ற இயக்குநர் வசந்தபாலன் வழங்க, விண்டோ பாய்ஸ் பிக்சர்ஸின் ஆர். சோமசுந்தரம் படத்தைத் தயாரித்து இருக்கிறார்.

‘அங்காடித்தெரு’, ‘அரவான்’, ‘காவிய தலைவன்’, ‘ஜெயில்’, ‘இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’, ‘காஷ்மோரா’ போன்ற படங்களில் உதவி இயக்குநராகப் பணியாற்றிய ரமேஷ் பழனிவேல், ‘Demon’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார். இயக்கம் மட்டுமின்றி இப்படத்தின் கதை, திரைக்கதை, வசனம் எழுதியுள்ளார்.

மோகன்லாலின் தேசியவிருது பெற்றத் திரைப்படமான ‘மரைக்காயர்’ படத்தில் தனது அற்புதமான இசைக்காக பாராட்டுகளைப் பெற்ற ரோனி ரஃபேல், இந்தப் படத்திற்கும் இசையமைக்கிறார். கார்த்திக் நேத்தா பாடல் வரிகளை எழுதுகிறார். ஆர்.எஸ். ஆனந்த குமார் (பிரபுதேவாவின் ‘குலேபாகவலி’ & ஜோதிகாவின் ‘ஜாக்பாட்’ புகழ்) இந்தப் படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார்.

இந்தப் படத்தின் கதை நிஜ வாழ்க்கை சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டது மற்றும் இதன் திரைக்கதை அம்சங்கள் நிச்சயம் பார்வையாளர்களை கவரும். ஹாரர்- சஸ்பென்ஸ்- த்ரில்லர் ஜானரில் உருவாகி இருக்கக்கூடிய இந்தப் படம் உலகம் முழுவதும் உள்ள பார்வையாளர்களுக்கும் பிடித்த வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. பீட்சா, ராட்சசன், பிசாசு மற்றும் பல படங்கள் இந்த ஜானரில் வெளியாகி வெற்றிப் பெற்றதற்கு உதாரணங்களாக இருக்கிறது. ‘Demon’ திரைப்படம் இவை அனைத்தையும் உள்ளடக்கி, உணர்ச்சிகரமான கதையுடன் வழங்கப்பட்டுள்ளது.

இயக்குநர் லிங்குசாமி வழங்கிய ‘பிகினிங்’ படத்தில் கதாநாயகனாக நடித்த சச்சின் இந்தப் படத்தில் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கிறார். ஜிவி பிரகாஷ்குமாரின் நடிப்பில், வசந்தபாலன் இயக்கத்தில் வெளியான ‘ஜெயில்’ படத்தில் சிறந்த நடிப்பையும், ‘தேன்’ படத்திற்காக பல விருதுகளையும் பெற்ற அபர்நதி இதில் கதாநாயகியாக நடிக்கிறார். ஆஹா தமிழ் ஓடிடி தளத்தில் வெளியான ‘உடன்பால்’ இணையத்தொடரிலும் அபர்நிதியின் நடிப்பிற்கு சிறந்த விமர்சனங்களும் கிடைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.

கும்கி அஸ்வின், இன்ஸ்டாகிராம் சென்சேஷன் ரவீனா தாஹா, பிக் பாஸ் புகழ் ஸ்ருதி பெரியசாமி, மிப்புசாமி, பிரபாகரன், அபிஷேக், தரணி, நவ்யா சுஜி, சலீமா மற்றும் பலர் இந்தப் படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

திகைப்பூட்டும் திரைக்கதை மற்றும் புதிய விசித்திரமான காட்சி அமைப்புடன் கூடிய ‘Demon’, பார்வையாளர்களுக்கு ஒரு புதிய திரை அனுபவத்தை விரைவில் வழங்கவுள்ளது. இந்த படத்தைத் தொடர்ந்து, விண்டோ பாய்ஸ் பிக்சர்ஸ் பல அறிமுக இயக்குநர்களுடன் படங்கள் செய்யத் திட்டமிட்டுள்ளது, இது குறித்தான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும்.

படத்தின் தொழில்நுட்பக்குழு விவரம்:

எழுதி இயக்கியவர்: ரமேஷ் பழனிவேல்,
தயாரிப்பு: ஆர்.சோமசுந்தரம்,
இசை: ரோனி ரஃபேல்,
ஒளிப்பதிவு: ஆர்.எஸ். ஆனந்த குமார் எம்.எஃப்.ஐ,
படத்தொகுப்பு: ரவிக்குமார். எம்,
கலை: விஜய் ராஜன்,
பாடலாசிரியர்: கார்த்திக் நேதா,
தயாரிப்பு நிர்வாகி: குமார் வீரப்பசாமி,
சண்டைக்காட்சிகள்: ராக் பிரபு,
ஆடை: கடலூர் எம்.ரமேஷ்,
ஒலிக்கலவை: ஹரிஷ்,
ஒலி வடிவமைப்பு: ராஜு ஆல்பர்ட்,
VFX & DI: Accel Media,
வண்ணம்: ஜி.எஸ்.முத்து,
தயாரிப்பு அமைப்பாளர்: வி.பாலகிருஷ்ணன்,
படங்கள்: முத்து வேல்,
மக்கள் தொடர்பு: சுரேஷ் சந்திரா-ரேகா டி’ஒன்,
விளம்பர வடிவமைப்பு: யுவராஜ் கணேசன்

National award-winning filmmaker Vasantha Balan presents,Debutant Ramesh Pazhaniivel directorial,Sachin-Abarnathi starrer “Demon” First Look is out now!!!

Actor Vijay Sethupathi & director Mysskin have launched the first look of ‘Demon’, a suspense-thriller laced with horror elements, is presented by National Award-winning filmmaker Vasantha Balan and is produced by R. Somasundaram of Window Boys Pictures.

Debut filmmaker Ramesh Pazhaniivel, who earlier worked as assistant director in movies like Angaadi Theru, Aravaan, Kaviya Thalaivan, Jail, Idharkuthane Aasaipattai Balakumara, and Kashmora, embarks on his directorial venture with ‘Demon’. Apart from direction, he has written this film’s story, screenplay, and dialogues as well.

Ronnie Raphael, who won appreciation for his spellbinding musical score in Mohanlal’s National award-winning movie “Maraikkayar” is composing music for this movie, which features lyrics by Karthik Netha.

R.S. Ananda Kumar (Prabhu Deva’s Gulaebhagavali & Jyothika’s Jackpot fame) is handling cinematography for this movie.

The film’s story is based on a real-life incident, and the screenplay is crafted with engrossing ingredients that will impress audiences from all walks of life. Films based on the Horror-Suspense-Thriller genre have appealed to the interests of universal audiences across the years when presented with an engaging screenplay. Movies like Pizza, Ratchasan, Pisasu, and many movies have been perfect examples. ‘Demon’ is crafted with the amalgamation of all these elements together laced with emotional content and presented with an engrossing package.

Actor Sachin, who played the protagonist in ‘Beginning’, presented by director N, Lingusamy is performing the lead character in this movie. Abarnathi, who shot to fame for her outstanding performance in GV Prakash Kumar’s ‘Jail’, directed by Vasantha Balan, and later won appreciation & awards for her acting in ‘Thaen’ is playing the female lead in this movie. It is noteworthy that her performance in the recent OTT series ‘Undanpaal’ streaming on Aha Tamil has won her great reviews.

Kumki Ashwin, Instagram sensation Raveena Daha, Bigg Boss fame Shruthi Periyasamy, Mippusamy, Prabhakaran, Abhishek, Tharani, Navya suji, Saleema, and others have performed as pivotal characters in this movie.

Demon, laced with riveting screenplay and new-fangled visual composition, will be soon offering a new wholesome theatrical experience for audiences. Following this movie, Window Boys Pictures is planning to collaborate with debut filmmakers for many projects, which will have the official announcement made soon.

Technical Crew

Written & directed by: Ramesh Pazhaniivel
Produced by: R. Somasundaram
Music: Ronnie Raphael
Cinematography: R.S. Ananda Kumar MFI
Editing: Ravikumar M
Art: Vijay Rajan
Lyricist: Karthik Netha
Production Executive: Kumar Veerappasamy
Stunts: Rock Prabhu
Costumes: Cuddalore M. Ramesh
Sound Mixing: Harish
Sound Design: Raju Albert
VFX & DI: Accel Media
Colorist: G.S. Muthu
Production Organizer: V. Balakrishnan
Stills: Muthu Vel
PRO: Suresh Chandra-Rekha D’One
Publicity Design: Yuvaraj Ganesan