தமிழின் லேடி சூப்பர் ஸ்டார், நயன்தாரா, தனது படங்களால் மாறுபட்ட பாத்திரங்களில் அற்புதமான நடிப்பை வழங்கி, அனைவரையும் மகிழ்வித்து வருபவர். அவரது ஒவ்வொரு திரைப்படமும் ரசிகர்களை உற்சாகப்படுத்த தவறுவதில்லை. அந்த வகையில் “நெற்றிக்கண்” திரைப்பட ட்ரெய்லர், அவரது பரந்த பட்ட ரசிகர்களிடம், பெரும் வரவேற்பை குவித்திருக்கிறது. “நெற்றிக்கண்” ஃபர்ஸ்ட் லுக் முதல், படத்தின் ஒவ்வொரு அறிவிப்பும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், சமீபத்தில் வெளியிடப்பட்ட ட்ரெய்லர் அனைத்து தளங்களிலும் 3 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளைப் பெற்று சாதனை படைத்ததுள்ளது. Disney Plus Hotstar “நெற்றிக்கண்” திரைப்பட ட்ரெய்லருக்கு கிடைத்து வரும், தனித்துவமான வரவேற்பில் பெரும் மகிழ்ச்சியடைந்துள்ளது. Disney Plus Hotstar , OTT தளம் நயன்தாராவுடன் இணைந்து வெளியிட்ட முந்தைய திரைப்படமான ‘மூக்குத்தி அம்மன்’ திரைப்படத்தின் பிளாக்பஸ்டர் வெற்றியில் அவரை தங்களின் அதிர்ஷ்ட சின்னமாக கொண்டாடி வருகிறது. சமீபத்தில் வெளியிடப்பட்ட “நெற்றிக்கண்” ட்ரெய்லர் YouTube தளத்தில் 3 மில்லியன் பார்வைகளை கடந்து, No 1 இடத்தை பிடித்து சாதனை படைத்து வருகிறது.
“நெற்றிக்கண்” திரைப்படத்தில் நயன்தாரா பார்வை குறைபாடுள்ள பெண்ணாக நடித்துள்ளார். நடிகர் அஜ்மல் எதிர் நாயகன் வேடத்தில் நடித்துள்ளார். இப்படம் ரசிகர்களை இருக்கை நுனியில் வைத்திருக்கும், பரபர திரில்லர் திரைப்படமாக உருவாகியுள்ளது.
“நெற்றிக்கண்” திரைப்படம் Disney Plus Hotstar ல் ஆகஸ்ட் 13, 2021 முதல் உலகமெங்கும் வெளியாகிறது. Rowdy Pictures சார்பில் விக்னேஷ் சிவன் இப்படத்தை தயாரித்துள்ளார். ‘அவள்’ படத்தில் வெற்றியால் புகழ் பெற்ற இயக்குநர் மிலிந்த் ராவ் இப்படத்தை இயக்கியுள்ளார். தொழில்நுட்பக் குழுவில் கிரிஷ் (இசை), ஆர்.டி.ராஜசேகர் (ஒளிப்பதிவு), S. கமலநாதன் (கலை), திலிப் சுப்பராயன் (ஸ்டண்ட்ஸ்), லாரன்ஸ் கிஷோர் (எடிட்டர்), விஜய் ரத்தினம் (ஒலி வடிவமைப்பாளர்), சைதன்யா ராவ் & தினேஷ் மனோகரன் (ஆடைகள்), நவீன் சுந்தரமூர்த்தி (வசனம்), A.M.ரஹமதுல்லா (ஒலி கலவை), கபிலன் (விளம்பர வடிவமைப்பாளர்), K.S.மயில்வாகனன் (இணை தயாரிப்பாளர்), குபேந்திரன் வி.கே (நிர்வாக தயாரிப்பாளர்), ஜி.முருகபூபதி & எம் மணிகண்டன் (தயாரிப்பு நிர்வாகி) ஆகியோர் பணியாற்றியுள்ளனர்.