Saturday, October 5
Shadow

நியூஸ் 7 தமிழ் தொலைக்காட்சியின் ‘சினிமேக்ஸ்’

காதல் கடிதங்களால் எழுப்பப்பட்ட காதல் கோட்டை திரைப்படம் வெளியாகி 25 வருடங்கள் கடந்திருக்கும் நிலையில், அதனை கொண்டாடும் வகையில் “கமலியிடம் கேளுங்கள்” என்கிற நிகழ்ச்சியினை நியூஸ் 7 தமிழ் தொலைக்காட்சி ஏற்பாடு செய்துள்ளது. அந்நிகழ்ச்சியின் சிறப்பு அம்சமாக , ரசிகர்கள், நடிகை தேவயானியிடம் காதல் கோட்டை படம் சம்பந்தப்பட்ட கேள்வியினை, காதல் கோட்டை பட பாணியில் கடிதம் மூலம் எழுதி,

கமலியிடம் கேளுங்கள்,

நியூஸ் 7 தமிழ் தொலைக்காட்சி,

எண் : 110 E, கோடம்பாக்கம் High Road, நுங்கம்பாக்கம், சென்னை – 600034

என்ற முகவரிக்கு அனுப்பலாம். வரும் கடிதங்களில் 25 கடிதங்களை நடிகை தேவயானி குலுக்கல் முறையில் தேர்வு செய்து, அதில் இருக்கும் கேள்விகளுக்கு நியூஸ் 7 தமிழ் தொலைக்காட்சியின் ‘சினிமேக்ஸ்’ நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டு பதில் அளிக்க உள்ளார்.

கடிதங்கள் சென்று சேர வேண்டிய கடைசி நாள் ஜூலை 21. இந்த நிகழ்ச்சியினை தொகுப்பாளினி நிவேதிதா தொகுத்து வழங்க, இயக்குனர் கமல் இயக்குகிறார்.