Thursday, February 13
Shadow

நியூஸ் 7 தமிழ் தொலைக்காட்சியில் ‘நியூஸ் 50’

நியூஸ் 7 தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ‘நியூஸ் 50’ ஒரு நிமிடம் கூட இடைவெளி இல்லாமல் ஜெட்வேகத்தில் தினமும் இரவு 8:00 மணிக்கு ஒளிபரப்பாகிறது.

உலகளவில் ஒரு நாளில் மட்டும் எண்ணிலடங்கா நிகழ்வுகள் நடக்கின்றன. இதில் முக்கியமான 50 நிகழ்வுகளை மட்டும் தொகுத்து வழங்குவதுதான் ‘நியூஸ் 50’ சிறப்பு.

இதில் அரசியல், ஆன்மிகம், சினிமா, கல்வி, விழிப்புணர்வு, வணிகம், விளையாட்டு என தமிழகம் மற்றும் இந்தியாவின் அனைத்து மாநில செய்திகளோடு அயலகச் செய்திகளும் சுவையாக இடம் பெறுகிறது.

ஒவ்வொரு செய்தியும் 20 வினாடி மட்டுமே இடம் பெறுவதால், அனைத்து தரப்பினர் மத்தியிலும் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது நியூஸ் 7 தமிழின் ‘நியூஸ் 50’