Sunday, November 3
Shadow

நியூஸ் 7 தொலைக்காட்சியின் ’சினிமேக்ஸ்’

தமிழ் சினிமா மற்றும் சின்னத்திரையினை சார்ந்த பிரபலங்களின் சுவாரஸ்யமான பேட்டிகள், ஓவ்வொரு வாரமும் நமது நியூஸ் 7 தொலைக்காட்சியின் ’சினிமேக்ஸ்’ நிகழ்ச்சியில் சனி மற்றும் ஞாயிறு கிழமைகளில் மாலை 5:30 மணிக்கு ஒளிப்பரப்பாகி வருகிறது.

அந்த வகையில் வரும் சனி மாலை 5.30 மணிக்கு ’சேது’ படம் மற்றும் ‘திருமதி செல்வம்’ தொடர் புகழ் நடிகை அபிதாவின் பேட்டியும், ‘ஜகமே தந்திரம்’ படத்தில் டூட் விக்கி கதாப்பாத்திரத்தில் நடித்து, அனைவரையும் கவர்ந்த நடிகர் சரத் ரவியின் பேட்டியும் ஒளிபரப்பாகிறது.

மேலும், ஞாயிறு மாலை 5.30 மணிக்கு YOUTUBE உலகை கலக்கிக் கொண்டிருக்கும் BLACK SHEEP சேனலின், FUN PANROM டீமின் ஜாலியான பேட்டி ஒளிபரப்பாகவுள்ளது. இந்த நிகழ்ச்சியினை தொகுப்பாளினி நிவேதிதா தொகுத்து வழங்க, இயக்குனர் கமல் இயக்குகிறார்.