பதைபதைப்பூட்டும் சம்பவங்கள், படிப்பினையூட்டும் பின்னணிகள், அதிர்ச்சியூட்டக் கூடிய பழிவாங்கல் என சிலிர்ப்பூட்டும் குற்றச் செய்திகளை தெரிவு செய்து விழிப்புணர்வுடன் நேரலையாக ஒளிபரப்புகிறது நியூஸ் 7 தமிழின் “க்ரைம் டைரி”.
தற்கொலை, குழந்தைகள் மற்றும் பெண்களுக்கெதிரான குற்றங்கள் குறித்த செய்திகள் ஒளிபரப்பாகும் போது, அந்தக் குற்றங்களுக்கு எதிரான விழிப்புணர்வு வாசகங்களை ஒளிபரப்புவது க்ரைம் டைரியின் சிறப்பம்சமாகும். நியூஸ் 7தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை மதியம் 1:00 மணிக்கும் இரவு 8:30 மணிக்கும் நேரலையாக ஒளிபரப்பாகிறது. இந்நிகழ்ச்சியை அங்கயற்கண்ணி தயாரித்து தொகுத்து வழங்குகிறார்.