Saturday, October 5
Shadow

கட்சித் தலைவர்களிடம் எளிய மக்கள் கேட்க நினைக்கும் கேள்விகள் யாவும் நியூஸ் 7தமிழ் குரலாக ஒலிக்கும் நிகழ்ச்சியே “வியூகம்’’

அரசியல் தலைவர்களிடம் நேருக்கு நேராக அரசியல், சமூக பிரச்னைகள் பற்றிய அவர்களின் நிலைப்பாடு, அந்த நிலைப்பாடு குறித்து மக்கள் எழுப்பும் ஐயங்கள் ஆகியவற்றை துல்லியமான கேள்விகள் மூலம் விவாதிக்கும் நிகழ்ச்சி “வியூகம்’’இந்நிகழ்ச்சி சனிக்கிழமை தோறும் இரவு 9:00 மணிக்கு நியூஸ் 7தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிறது.

தற்போதைய அரசியல் சூழல், கட்சிகளின் நிலைப்பாடு, மக்களின் எதிர்பார்ப்பு, களநிலவரம்,  தொலைநோக்குத் திட்டங்கள், தேர்தல் வியூகம்  உள்ளிட்ட  பல்வேறு விஷயங்கள் குறித்து அரசியல் கட்சித் தலைவர்களிடம் நேரடியாகக்  கேள்விகள் எழுப்பப்பட்டு விரிவான பதில்கள் பெறப்படும் வகையில் நிகழ்ச்சி வடிவமைக்கப்பட்டுள்ளது.

கட்சித் தலைவர்களிடம் எளிய மக்கள் கேட்க நினைக்கும் கேள்விகள் யாவும் நியூஸ் 7தமிழ் குரலாக ஒலிக்கும் நிகழ்ச்சியே வியூகம். இந்நிகழ்ச்சியை விஜயன், சுகிதா சாரங்கராஜ் ஆகியோர் தொகுத்து வழங்குகின்றனர்.