Thursday, February 29
Shadow

Nikhil, Garry BH, Ed Entertainments National Thriller SPY Teaser Launch On May 15th At Subhash Chandra Bose Statue, Karthavya Path in New Delhi

புது தில்லியில் வெளியிடப்படும் ‘ஸ்பை’ பட டீசர்

புது தில்லி கர்தவ்யா பாதையில் அமைந்திருக்கும் சுபாஷ் சந்திர போஸ் சிலை அருகே மே 15ஆம் தேதியன்று நிகில் -கேரி பி ஹெச்- Ed என்டர்டெய்ன்மெண்ட்ஸ் ஆகியோரின் கூட்டணியில் தயாரான ‘ஸ்பை’ எனும் திரில்லர் திரைப்படத்தின் டீசர் வெளியிடப்படுகிறது.

நட்சத்திர நடிகர் நிகில் நடிப்பில் விரைவில் வெளியாகவிருக்கும் பான் இந்திய திரைப்படம் ‘ஸ்பை’. மறைக்கப்பட்ட இந்திய சுதந்திர போராட்ட வீரர் சுபாஷ் சந்திர போஸின் மரணம் குறித்த ரகசியங்களை அடிப்படையாகக் கொண்டு, இதன் கதை உருவாக்கப்பட்டிருக்கிறது. ‘நீங்கள் எனக்கு ரத்தத்தை கொடுங்கள். நான் உங்களுக்கு சுதந்திரம் தருகிறேன்’ என வீரர் சுபாஷ் சந்திர போஸின் வீர முழக்கத்தை… இப்படத்தின் தயாரிப்பாளர்கள் அண்மையில் வெளியிட்ட காணொளியில் இடம்பெற்று பெரும் கவனத்தை ஈர்த்தது.

டெல்லியில் உண்மையிலேயே வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வு ஒன்று நடைபெறவிருக்கிறது. மே 15 ஆம் தேதியன்று கர்தவ்யா பாதையில் ஸ்பை படத்தின் டீசர் வெளியிடப்படுகிறது. இந்த பாதையில் நடைபெறும் முதல் திரைப்பட டீஸர் வெளியிட்டு விழா இது என்பதால் சிறப்பு அடையாளத்தை பெற்றிருக்கிறது. மேலும் அதற்கான கவுண்ட் டவுன் தொடங்கி இருக்கிறது. இதனை ஒவ்வொருவரும் தங்களுக்கு தெரிந்த நண்பர்களுக்கு பகிருங்கள். மேலும் திரையில் யாரும் எதிர்பாராத ஒரு பிரம்மாண்ட படைப்பு வரவிருக்கிறது என்பதையும் தெரியப்படுத்துங்கள்.‌

பிரபல பட தொகுப்பாளரான கேரி பி ஹெச்- இப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகிறார். இந்த திரைப்படத்தை Ed என்டர்டெய்ன்மெண்ட்ஸ் எனும் நிறுவனம் சார்பில் கே. ராஜசேகர் ரெட்டி பிரம்மாண்டமாக தயாரிக்கிறார். இந்நிறுவனத்தில் சரந்தேஜ் உப்பலபதி தலைமை நிர்வாக அதிகாரியாக பணியாற்றுகிறார்.

இந்த திரைப்படத்தில் நட்சத்திர நாயகன் நிகிலுக்கு ஜோடியாக ஐஸ்வர்யா மேனனும், இரண்டாவது நாயகியாக சானியா தாக்கூருமா நடித்திருக்கிறார்கள். இவர்களுடன் ஆரியன் ராஜேஷ் சிறப்பு தோற்றத்தில் நடிக்கிறார். மேலும் அபிநவ் கோமடம், மகரந்த் தேஷ் பாண்டே, ஜிஷு செங் குப்தா, நித்தின் மேத்தா, ரவி வர்மா, கிருஷ்ண தேஜா, பிரிஷா சிங்,, சோனியா நரேஷ் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். வம்சி பட்சிபுளுசு மற்றும் மார்க் டேவிட் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஸ்ரீ சரண் பக்கலா மற்றும் விஷால் சந்திரசேகர் ஆகியோர் இணைந்து இசையமைத்திருக்கிறார்கள்.

ஆக்ஷன் கலந்த ஸ்பை த்ரில்லராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தின் கதையை தயாரிப்பாளர் கே ராஜசேகர் ரெட்டி எழுதி இருக்கிறார். மேலும் இந்த திரைப்படம் தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என ஐந்து இந்திய மொழிகளில் வெளியாகிறது. இந்த திரைப்படம் எதிர்வரும் ஜூன் மாதம் 29 ஆம் தேதியன்று உலகம் முழுவதும் பிரம்மாண்டமாக வெளியாகிறது.

Nikhil, Garry BH, Ed Entertainments National Thriller SPY Teaser Launch On May 15th At Subhash Chandra Bose Statue, Karthavya Path in New Delhi

Nikhil’s upcoming Pan-Indian movie SPY, a national thriller, is based on the hidden story and the secrets of Subhash Chandrabose who gave the slogan- Tum Mujhe Khoon Do, Main Tumhe Azadi Doonga (You give me blood I will give you freedom), as suggested by a video released recently by the makers.

Something truly historic is about to happen in Delhi. Spy teaser drops on 15th May at Kartavya Path(Raj Path) . Brace yourselves for the FIRST-EVER movie teaser launch at this iconic landmark! Mark your calendars as the countdown begins NOW! Spread the word, and let everyone know that something terrific is about to hit the screens!

Popular editor Garry BH is making his debut as a director with the movie being produced on a grand scale by K Rajashekhar Reddy on Ed Entrainments along with Charantej Uppalapati as CEO.

Iswarya Menon is the leading lady opposite Nikhil and Sanya Thakur will be seen as the second lead in the movie playing a powerful role. Aryan Rajesh in his comeback is playing a special role.

Producer K Rajashekhar Reddy has also provided a story for this flick billed to be a complete action-packed spy thriller that will release across five languages – Telugu, Hindi, Tamil, Malayalam, and Kannada.

SPY is set for a grand release worldwide on June 29th, this year.

Cast: Nikhil Siddhartha, Aryan Rajesh, Iswarya Menon, Sanya Thakur , Abhinav Gomatam, Makrand Deshpande, Jisshu Sen Gupta, Nitin Mehta, Ravi Varma, Krishna Teja, Prisha Singh, Sonia Naresh & Others.

Technical Crew:
Directed & Edited by Garry BH
Story & Produced by K. Rajashekhar Reddy
CEO Charantej Uppalapati
DOP Vamsi Patchipulusu, Mark David
Additional Cinematography Julian Amaru Estrada DFP, Keiko Nakahara
Writer Anirudh Krishnamurthy
Music Sricharan Pakala, Vishal Chandrasekhar
Art Arjun Surisetty
Sound Design Sync Cinema
DI & Mixing Annapurna Studios
Mixing Engineer Kannan Ganpat
Associate Editor Bhavin M Shah
PRO Yuvraaj
Digital Tamada Media