Sunday, November 3
Shadow

பாடகியும் நடிகையுமான பரவை முனியம்மா இறைவனோடு சேர்ந்தார்

மதுரை மாவட்டம் பரவை என்ற பகுதியைச் சேர்ந்தவர் முனியம்மா.

நாட்டுப்புற பாடல்கள் மூலம் கிட்டதட்ட 30 ஆண்டுகள் பாடல் அந்த துறையில் கோலோச்சி வருபவர் இவர்.

வெளிநாடுகளிலும் கூட இவரது நாட்டுப்புற பாட்டுக்கு ரசிகர்கள் உருவாகினர். அங்கும் சில மேடை நிகழ்ச்சிகளில் கலந்துக் கொண்டுள்ளார்.

விக்ரம் நடித்த ‘தூள்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமானார். இதுவரை 80 படங்களில் நடித்திருக்கிறார்.

கடைசியாக சிவகார்த்திகேயனின் ‘மான் கராத்தே’ படத்தில் நடித்திருந்தார்.

இவருக்கு 3 மகன்கள், 3 மகள்கள் உள்ளனர். இதில் செந்தில் குமார் என்ற மகன் மட்டும் மூளை வளர்ச்சி குறைந்தவர்.

இவரை நினைத்தே அடிக்கடிவருந்துவார்.

எனவே தமிழக அரசு சார்பில் ஏதேனும் உதவிகள் கிடைக்குமா எனப் பலமுறை முயற்சி செய்து வந்தார்.

மேலும், கிராமப்புற சமையல் என்ற நிகழ்ச்சியின் மூலம் டிவி நிகழ்ச்சியிலும் கலந்துக் கொண்டுள்ளார்.

மண் பானையிலேயே சமையல் செய்வதால் அதிலும் பிரபலமானார்.
சில வருடங்களுக்கு முன்பு உடல்நிலை காரணமாக சினிமா வாய்ப்பு குறைந்து போனதால் வறுமையில் வாடினார்.

அப்போது மறைந்த முதல்வர் ஜெயலலிதா இவருடைய நிலையை அறிந்து 6 லட்ச ரூபாய் நிதியுதவி செய்தார்.

இவரின் வங்கி கணக்கில் பணத்தை செலுத்தி, அதன் வட்டித் தொகை இவருக்குக் கிடைப்பது போன்று செய்தார்.
சமீப காலமாக உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டார்.

இவரின் மருத்துவ சிகிச்சைக்கு பணம் இல்லாமல் தவித்து வந்தார்.

இதனையடுத்து திரைத்துறையைச் சேர்ந்தவர்கள் பலர் உதவி செய்தனர். மேலும், நடிகர் சங்கம் சார்பில் உதவித்தொகையும் வழங்கப்பட்டது.

இந்த நிலையில், இன்று அதிகாலை காலமானார்.

தமிழக அரசு இவருக்கு கலைமாமணி பட்டம் வழங்கி கவுரவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.