Saturday, April 20
Shadow

Parole Movie Review

‘ப்ரோல்’ திரைப்பட ரேட்டிங்: 3/5

 

 

வடசென்னை என்றாலே இதுவரை ரவுடிஸம் என்று தான் சினிமாவில் காட்டியுள்ளார்கள் ஆனால் இது திரைப்படத்தில் கொஞ்சம் அதிகமாகவே ரவுடிசத்தையும் நல்ல கதைகளத்தையும் எடுத்து இருக்கிறார்கள் வாருங்கள் திரைப்படத்தின் விமர்சனத்தை பார்ப்போம்.

 

 

இறந்த தாயின் விருப்பமான மகன் லிங்காவை (அண்ணனை) சிறையிலிருந்து பரோலில் எடுக்க தம்பி கார்த்திக்கேயன் போராடுகிறார். இந்த போராட்டமும் இதில் இருக்கும் பகைமையின் பின்னணியே ‘பரோல்’ படத்தின் கதை ஆகும்.

 

வடசென்னை என்றாலே ரவுடிஸம் மற்றும் கெட்ட வார்த்தை என்ற கருத்தில் படம் முழுவதுமாக வடசென்னையில் நகர்கிறது. சிறு வயதிலே சீர்திருத்தப் பள்ளியில் இருக்கும் லிங்கா எப்படி வெறிபிடித்த கொலை குற்றவாளியாக மாறுகிறான் என்பது அப்பாவி சிறுவர்களின் யதார்த்தமாகும். ஆனால் அதை காட்சிப்படுத்த அதீத ஆபாசம் புகுத்தியது படத்திற்கு தொய்வாக அமைந்தது.

 

 

 

 

இறந்த தாயின் இறுதி சடங்கை நிறைவேற்ற அண்ணனை பரோல் எடுக்க தம்பி போராடுவது கதைக்குள் நம்மை இழுத்து செல்கிறது. அம்மா, மகன் செண்டிமெண்ட் மற்றும் அண்ணன் தம்பி உறவு படத்திற்கு மிகப்பெரிய பலமாகும்.

 

தான் சொல்ல வந்த கருத்தை இயக்குநர் கிளைமேக்ஸில் சொல்லிய விதம் டைரக்டர் ட்ச் ஆகும். படத்தில் கதாநாயகிகளுக்கு சிறிய பங்கு மட்டுமே இருந்தாலும், ரசிக்கும் படியான நடிப்பில் கல்பிகா மற்றும் மோனிஷா வெளிப்படுத்தியுள்ளனர். திரைக்கதைக்கு முக்கியமான பலம் என்றால் இசை, எடிட்டிங் ஆகும்

 

நல்ல கருத்தை சொல்ல எடுத்த முயற்சி பாராட்டுவதற்கு உரியதாக இருந்தாலும் அதை சொல்ல முன் வைத்த ஆபாசம் சற்று முகம் சுழிக்க வைக்கிறது. ஒரு ராவான கேங்ஸட்ர் படம் “பரோல்” ஆகும்.