Saturday, November 2
Shadow

Parunthaagudhu Oorkuruvi – An edge-of-seat forest survival thriller based on single day is hitting screens soon

Parunthaagudhu Oorkuruvi – An edge-of-seat forest survival thriller based on single day is hitting screens soon

Lights On Media Presents ‘Parunthaagudhu Oor Kuruvi’, an edge-of-seat survival thriller, directed by Dhanabalan Govindaraj starring Nishanth Russo and Vivek Prasanna in the lead characters, which had its teaser revealed recently has witnessed tremendous response.

The film based on the theme of ‘Deceitfulness and Evil shall perish’ is created by a young and vibrant team that has lots of edge-seated moments. It has been very much illustrious with the recently released teaser, which was revealed by the Tamil film industry’s most eminent personalities like Actor Arya, Director Mari Selvaraj, and Comedy actor Sathish.

Shedding lights on the film, director Dhanabalan Govindaraj said, “The story revolves around the bonding between a youngster and a man, who is desperately wanted by gangsters, politicians and police department during their journey inside a forest. In an unexpected turn, both of them face excruciating challenges inside the forest as they are trapped inside it. Their attempts to survive from the clutches of enemies inside the deep-rooted forests within a day form the crux of this story. We have created this movie based on the true incident that happened in India. We have shot the movie across Ooty and Mudhumalai forests. The movie will be a new-fangled thriller journey that will offer a first-of-its-experience for the audiences.”

Parunthaagudhu Oorkuruvi is a result of pure craftsmanship from the team of brand new young talents, who have exerted their utmost efforts to nurture this film with excellence. While Nishanth Russo and Vivek Prasanna are playing the lead roles, Mumbai-based model Gayathri Iyer plays the female lead role. The others in the star cast include Ratchasan fame Vinod Sagar, Kodangi Vadivel, Aroul D Shankar, E Ramadass, Gowtham Selvaraj, Anand, Sundarrajan, Athick & Rajesh.

Dhanabalan Govindaraj, a former assistant of director Ram is screenwriting and directing this movie. Lights On Media, one of the most leading successful Digital Marketing Industries is embarking on its production venture with this movie. EAV Suresh-Sundhara Krishna. P & Venki Chandrsekhar are jointly producing this movie.

The preparations are happening in full swing to release the film’s trailer, audio and worldwide theatrical release of this movie. The official announcement pertaining to the release date will be made soon.

Technical Crew

Dop – Ashwin Noel

Music – Renjith Unni
Editor – Nelson Anthony
Lyricist – Vithaakar
Action Master – Om Prakash
Art Director – Vivek Selvaraj
Costume Designer- Karthik Kumar S
Sound Design and Sound Mix – Arun Uma/Raja Nallaiha
Makeup – Pandiarajan
Stills – Murali Sridhar
PRO – Sathish (AIM)
அடர்ந்த காட்டுக்குள் ஒரு நாளில் நடக்கும் பரபர  சர்வைவல் திரில்லர் “பருந்தாகுது ஊர்க்குருவி” திரைப்படம் விரைவில் திரையில்  !

Lights On  Media  வழங்கும், இயக்குநர் தனபாலன் கோவிந்தராஜ் இயக்கத்தில் நிஷாந்த் ரூஷோ, விவேக் பிரசன்னா நடிப்பில் சர்வைவல் திரில்லராக உருவாகி இருக்கும் திரில்லர் படம் “பருந்தாகுது ஊர்க்குருவி” சமீபத்தில் வெளியான இப்படத்தின் டீசர்  ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை குவித்துள்ளது.

‘வஞ்சகமும் சூழ்ச்சியும் ஒரு போதும் நிலைக்காது…’  எனும் கருத்தில், திறமை மிகு இளைஞர்கள் குழுவின் முயற்சியில், பரபர திரில் பயணமாக உருவாகியுள்ள “பருந்தாகுது ஊர்க்குருவி” படத்தின் முன்னோட்டம் சமீபத்தில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது. காட்டுக்குள் நடக்கும் பரபர பயணத்தின் சிறு துளியை அறிமுகப்படுத்தும் வகையில் மிரள வைக்கும் உருவாக்கத்தில் வெளியான முன்னோட்டம்  ரசிகர்கள் விமர்சகர்கள் மட்டுமல்லாது பொதுமக்களிடமும்  ஆர்வத்தை தூண்டுவதோடு, பெரும் வரவேற்பையும் பெற்றுள்ளது.

படம் பற்றி இயக்குநர் தனபாலன் கோவிந்தராஜ் கூறுகையில் …
கேங்ஸ்டர் கூட்டம், அரசியல்வாதிகள், போலீஸ் என மூவரால் தேடப்படும் ஒருவனுக்கும் இளைஞன் ஒருவனுக்கும் காட்டில் ஏற்படும் நட்பு, அதனை தொடர்ந்து அடுத்த கட்ட நிகழ்வுகளுமே கதை. அந்த காட்டுக்குள் அவர்கள் சிக்கியது ஏன் எதிரிகளிடமிருந்து தப்பித்தார்களா என்பதை ஒரு நாளுக்குள் நடக்கும் நிகழ்வுகளாக சொல்லியுள்ளோம். இந்தியாவில் நடந்த உண்மை சம்பவத்தின் அடிப்படையில் இந்த கதையை உருவாக்கியுள்ளோம். ஊட்டி முதுமலை காடுகளில் படமாக்கியுள்ளோம். மாறுபட்ட ஒரு பரபரப்பான திரில் பயணமாக இப்படம் இருக்கும் என்றார்.

புத்தம் புதிய இளம் திறமையாளர்கள் இணைந்து இப்படத்தை உருவாக்கி இருக்கின்றனர்… நிஷாந்த் ரூஷோ, விவேக் பிரசன்னா முதன்மை பாத்திரங்களில் நடித்துள்ளனர். மும்பை மாடல் காயத்திரி ஐயர் இப்படத்தில் நாயகியாக நடிக்கிறார். ராட்சசன் வினோத் சாகர், அருள் D சங்கர், கோடங்கி வடிவேல், E ராம்தாஸ் ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இயக்குநர் ராம் அவர்களிடம் உதவி இயக்குநராக பணியாற்றிய தனபாலன் கோவிந்தராஜ் இப்படத்தின் கதை திரைக்கதை எழுதி இயக்குகிறார், டிஜிட்டல் மார்க்கெட்டிங் துறையில் முன்னணி நிறுவனமாக வலம் வரும்  Lights On  Media தனது முதல் படைப்பாக இப்படத்தை  தயாரிக்கிறது.   சுரேஷ் EAV, சுந்தர கிருஷ்ணா P.,வெங்கி சந்திரசேகர் ஆகியோர் இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளனர்.

தொழில் நுட்ப குழுவில்
ஒளிப்பதிவு – அஷ்வின் நோயல், எடிட்டர்கள் – ( டான் படப்புகழ் )நாகூரான் ராமசந்திரன் – நெல்சன் அந்தோணி, இசை – ரெஞ்சித் உண்ணி, சண்டை காட்சிகள் – ஓம் பிரகாஷ், கலை இயக்கம் – விவேக் செல்வராஜ், உடை வடிவமைப்பு – கார்த்திக் குமார்.S, சண்முகப்பிரியா, மக்கள் தொடர்பு – சதீஷ் AIM ஆகியோர் பணியாற்றுகின்றனர்.

படத்தின் டிரெய்லர், இசை மற்றும் திரையரங்கு வெளியீட்டு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.  இது குறித்த அறிவிப்புகள் விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியாகும்.