Friday, June 14
Shadow

‘Pathu Thala’ Audio Launch | STR | AR Rahman | T Rajendar | Gowtham Karthik |

‘பத்து தல’ படத்தின் இசை வெளியீட்டு விழா!

ஸ்டுடியோ கிரீன், ஞானவேல்ராஜா தயாரிப்பில் ஓபிலி கிருஷ்ணா இயக்கத்தில் நடிகர்கள் சிலம்பரசன், கெளதம் கார்த்திக், ப்ரியா பவானி சங்கர் உள்ளிட்ட பலர் நடிப்பில், ஏ.ஆர். ரஹ்மான் இசையமைப்பில் ‘பத்து தல’ திரைப்படம் இந்த மாதம் 30ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இதையொட்டி இதன் பிரமாண்டமான இசை வெளியீட்டு விழா சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் நேற்று (18.03.2023) நடைபெற்றது.

நிகழ்ச்சியில் படத்தின் ட்ரைய்லர் மற்றும் பாடல்கள் ரசிகர்கள் மத்தியில் வெளியிடப்பட்டது. மேடையில் படத்தின் பாடல்கள் குறித்தும் இதன் அனுபவம் பற்றியும் ரஹ்மான் பகிர்ந்து கொண்டதாவது, “‘பத்து துல’ படம் நான் ஒத்துக் கொண்டதற்கு முதல் காரணம் என் தம்பி சிலம்பரசன். அதன் பிறகு இயக்குநர் ஓபிலி கிருஷ்ணா. அவருக்கு மிகச் சிறந்த இசை அறிவு இருக்கிறது. என்னுடைய சினிமா பயணத்தில் மிகச்சிறந்த பாடல்களில் ஒன்றாக ‘முன்பே வா என் அன்பே வா’ பாடலை குறிப்பிடுவேன். இப்பொழுது வரைக்கும் பாடல் வெளியாகி பல வருடங்கள் கடந்தும் அது பலருக்கும் பிடித்த பாடலாக இருக்கிறது. முதலில் அந்த பாடலுக்கு இசையமைத்துவிட்டு, இது மிகவும் சோகமாக இருக்கிறது என்று இயக்குநரிடம் சொன்னேன். ஆனால், அது நிச்சயம் வெற்றியடையும் பொறுத்திருந்து பாருங்கள் என்று சொன்னார். அப்படியே நடந்தது. அதை சரியாக கணித்து அவர் என்னிடம் சொன்னார். அவருடைய பொறுமை, இசைமேல் அவர் வைத்திருக்கும் நம்பிக்கை என இது எல்லாமும் நான் இந்த படம் ஒத்துக் கொள்ள காரணங்கள். படத்தின் அனைத்து பாடல்களும் மாஸாக இருக்கும். இந்த படத்தில் இடம் பெற்றுள்ள ‘அக்கரையில..’ பாடல் சிம்பு பாட வேண்டியது. ஆனால் அவர் அந்த சமயத்தில் தாய்லாந்துக்கு சென்று விட்டதால் இந்த பாடலை நான் பாடினேன். டி.ஆர். சார் இங்கு இருக்கிறார். அவர்தான் எனக்கு மிகப்பெரிய இன்ஸ்பிரேஷன். இந்த தருணத்தில் இன்னொரு விஷயத்தை சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். ‘சேவ் லைட்மேன் ஃபண்ட்’ என லைட்மேன்களுக்காக இணையதளம் ஒன்று ஆரம்பித்துள்ளோம். படத்திற்கு ஒளிபாய்ச்சுவது அவர்கள்தான். அவர்களுக்கு சரியான இன்ஷூரன்ஸ் இல்லாமல் இருக்கிறது. இந்த இணையதளத்தை சிம்பு லான்ச் செய்ய வேண்டும் என விரும்புகிறேன்’ என ரஹ்மான் வேண்டுகோளுக்கு இணங்க சிம்பு இந்த இணையதளத்தை அறிமுகப்படுத்தினார்.

அடுத்து மேடை ஏறியவர் இயக்குநர், நடிகர் என பன்முகத் திறன் கொண்ட டி. ராஜேந்திரன். அவர் பேசியதாவது, ” இப்படி மேடை ஏறி உங்கள் அனைவரையும் நான் சந்திப்பேன் என்று நினைத்து பார்க்கவே இல்லை. உங்கள் அனைவருக்கும் முதற்கண் என் வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த விழாவில் நான் கலந்து கொள்ள வேண்டும் என்று விரும்பி வரவில்லை. நான் அமெரிக்கா சென்று என் உடல் ஆரோக்கியத்திற்காக சிகிச்சை எடுத்து வந்த பிறகு கூட்டம் இருக்கும் இடங்களுக்கு பெரிதாக நான் செல்வதில்லை. ஆனால் இங்கு இருப்பதும் திரளான கூட்டம். இந்த நிகழ்ச்சிக்கு நான் வரவேண்டும் என்று என் மகனுக்கு ஒரு நாட்டம். நான் வரவில்லை என்றால் என் மகனுக்கு வந்து விடும் வாட்டம். என்னை பார்த்ததும் எஸ் டி ஆர் ரசிகர்களுக்கு ஆனந்த நீரோட்டம். அதற்கு காரணம் இந்த ‘பத்து தல’ என்ற தேரோட்டம். என் மகனும் என்னை போல் தமிழில் பேசட்டும், இறைவன் அருளால் பல காலம் வாழட்டும். இப்படி நான் பேச ஆரம்பித்தால் விடியும் வரை பேசிக் கொண்டிருப்பேன். ஆனால் அதிகம் நான் பேசக்கூடாது என்று என் மனைவி உஷா அன்பு கட்டளை விதித்துள்ளார். சிம்பு என்னை மேலே ஏறக்கூடாது என்று சொல்வார். அப்படியே ஏறினாலும் அவரது ரசிகர்களை நான் திருப்தி படுத்தாமல் கீழே வரக்கூடாது என்று சொல்வார். கலைஞனாக அனைவரையும் மகிழ்விக்க வேண்டும் என்று சொல்வார். அமெரிக்கா போய் விட்டு நான் இங்கு வந்து நிற்கிறேன் என்றால் அதற்கு காரணம் என் மகனின் அன்பு. அந்த அன்புக்காகவே இந்த இசை வெளியீட்டு விழாவுக்கு வந்தேன்’ என படக்குழுவினருக்குத் தனது வாழ்த்துகளைத் தெரிவித்தார்.

அடுத்து இயக்குநர் ஓபிலி கிருஷ்ணா பேசியதாவது, “நான் பேச அதிக நேரம் எடுத்துக்கொள்ள மாட்டேன். இந்த படத்தின் வாய்ப்பைக் கொடுத்தது தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா தான். ஆனால், சூழ்நிலை காரணமாக இந்த படத்தை கைவிட வேண்டிய நிலையில் இருந்தோம். கௌதம் கார்த்திக் உடைய போர்ஷன் அனைத்தையும் முடித்து விட்டோம். சிம்பு அடுத்த ஷெட்யூலுக்காக தயாராகிக் கொண்டிருக்கிறார். இப்படியான சூழ்நிலையில் நியாயமான காரணங்களால் படத்தை கைவிட வேண்டிய நிலையில் யாரிடமும் சொல்ல முடியாமல் குழப்பத்தில் இருந்தோம். ஏற்கனவே என்னுடைய இரண்டு படங்கள் கைவிடப்பட்டு விட்டது. அதேபோலவே இந்த படமும் கைவிட்டால் எனக்கு…

Full Video: ‘Pathu Thala’ Audio Launch | STR | AR Rahman | T Rajendar | Gowtham Karthik |

#simbuspeech #pathuthalafirst #pathuthalaaudiolaunch #pathuthalatrailer
#focusnewz #focusnews #kollywoodmix #cinema #news #tamil #tamilnadu

The #AGR Rage is UNSTOPPABLE 🔥
#PathuThalaTrailer Hits a MASSIVE 1⃣0⃣ Million+ views 🔗 http://bit.ly/PathuThalaTrailer

#Atman @SilambarasanTR_ @Gautham_Karthik
#PathuThala #PathuThalaFromMarch30

An @arrahman musical 🎵
🎬 @nameis_krishna

Produced by @StudioGreen2 @Kegvraja @PenMovies @jayantilalgada
Worldwide #StudioGreen Release💥

#SilambarasanTR #GauthamKarthik @menongautham @priya_Bshankar @KalaiActor @Iamteejaymelody @i_anusithara @kingsleyreddin @Cinemainmygenes @KavingarSnekan @KaviKabilan2 @utharamenon5 @NehaGnanavel @Dhananjayang @agrajaofficial @evdineshkumar_ #FarookJBasha @ajayraaj @SonyMusicSouth @R_chandru @Clinton22Roach @PrimeVideoIN @SimplySouthApp @homescreenent @mangomassmedia @DoneChannel1 @digitallynow