Thursday, September 29
Shadow

பேய் மாமா – விமர்சனம்

இயக்குனர் ஷக்தி சிதம்பரம் இயக்கத்தில்  யோகி பாபு, மொட்டை ராஜேந்திரன், எம் எஸ்.பாஸ்கர், இமான் அண்ணாச்சி, ரமேஷ் கண்ணா, ரேகா,கோவை சரளா, மாளவிகா மேனன், ரேஷ்மா ஆகியோர் நடிப்பில்  வெளியாகி இருக்கும்  ‘பேய் மாமா’

மூலிகைகள் நிறைந்த இயற்கையான மலைப் பகுதியில் அமைந்துள்ள பங்களாவில் எம்.எஸ்.பாஸ்கர்,குடும்பத்தினர்  வாழ்ந்து வருகிறார்கள் .அங்குள்ள மக்களுக்கு  இலவசமாக இயற்கை வைத்தியம் செய்து நோய்களிலிருந்து காக்கிறார்கள். எதிர்பாராத விதமாக வில்லன்களால் இவர்கள் கொலை செய்யப்படுகிறார்கள்.அந்த பங்களாவில் பேய்கள் நடமாட்டம் அதிகம் என்று கதைகளை கட்டவிழ்த்துவிட்டு பங்களா பக்கம் யாரும் நெருங்க முடியாதபடி செய்கிறான் வில்லன்

திருட்டு தொழில் செய்யும் யோகி பாபுவின் குடும்பம் தாங்கள் பேய்களை விரட்டும் சாமியார்கள் என்று அந்த பங்களாவிற்குள் நுழைகிறார்கள். .உண்மையில் அந்த பங்களாவில்  பேய் இருக்கிறதா.? இல்லையா.?  என்பதே படத்தின் மீதிக்கதை

கதையின் நாயகனாக நடித்திருக்கும் யோகிபாபு, தனக்கே உரிய பாணியில் நடித்து அசத்தி இருக்கிறார். தான் ஹீரோ இல்லை காமெடியன்தான் என்று அவரே வசனங்கள் பேசி தன்னை பற்றி சுய விளக்கம் அளிக்கிறார். இவருடன், ரேகா, மொட்டை ராஜேந்திரன், கோவை சரளா, சாம்ஸ், எம் எஸ் பாஸ்கர், இமான் அண்ணாச்சி, ரேஷ்மா,  இவர்களுக்கு கொடுத்த  சரியாக செய்திருக்கிறார்கள் .

ராஜ் ஆர்யன் இசையில் பாடல்கள் அனைத்தும் கேட்கும் ரகம். பின்னணி இசையையும் ஓரளவிற்கு கொடுத்து இருக்கிறார். ஒளிப்பதிவில் எம்.வி.பன்னீர்செல்வம் கூடுதல் கவனம் செலுத்தி இருக்கலாம்.