“பாண்டம் எப் எக்ஸ் (PhantomFX) நிறுவனம், பங்கு விற்பனையில் அடியெடுத்து வைக்கிறது”
இந்தியாவின் முன்னணி காட்சிக்கலைப் படப்பிடிப்புக் கூடங்களில் (VFX Studios) ஒன்றான பாண்டம் டிஜிட்டல் எபெக்ட்ஸ் லிமிடெட் (PhantomFX) நிறுவனம், உலகம் முழுவதும் பல திரைப்படங்களுக்கும், இணையத் தொடர்களுக்கும், விளம்பரங்களுக்கும் பிரமிக்க வைக்கும் தத்ரூபமான காட்சி விருந்துகளை உருவாக்கித் தந்திருக்கிறது.
இப்போது,இந்தியாவிலும், வெளிநாடுகளிலும் உயரிய தரத்திலான டிஜிட்டல் அரங்குகளை (Digital Studios) 40 கோடி ரூபாய் முதலீட்டில் அமைப்பதற்கான மகத்தான விரிவாக்கத்திற்கு PhantomFX இந்நிறுவனம் திட்டமிட்டிருக்கிறது.
“நம்பகமான நெட்வொர்க் கூட்டாளி (Trusted Partner Network – TPN) என்று சான்று அளிக்கப்பட்டிருக்கும் PhantomFX நிறுவனம் அடுத்த சில ஆண்டுகளில் இந்தத் துறையில் உலகத்தில் தலையாய இடத்தைப் பிடிப்பதற்காக, உயரிய தரத்துடன் டிஜிட்டல் ஸ்டுடியோக்களை உருவாக்கி தனது சிறகுகளைப் பரப்ப இருக்கிறது” என்கிறார் இதன் நிறுவனரும், நிர்வாக இயக்குநரும், தலைமைச் செயல் அதிகாரியுமான திரு.பிஜோய் அற்புதராஜ்.
VFX, அனிமேஷன் பிரிவுகள் மிகவும் விரைவாக வளர்ந்துவரும் துறைகள், எதிர்காலத்தில் மிக பிரம்மாண்டமன அளவில் வளர்ந்து வரக்கூடிய ஆற்றல் படைத்த தொழில்களாக இவை இருக்கும் என்றும் இவர் உறுதிபடக் கூறுகிறார்.
இத்தகைய சூழ்நிலையை முழுமையாகப் பயன்படுத்திக் கொண்டு உலகிலேயே முதன்மையான VFX நிறுவனமாக தன்னை நிலைநிறுத்திக் கொள்வதற்கு PhantomFX நிறுவனம் ஆயத்தப்படுத்தி கொண்டு வருகிறது.
கொச்சி, ஹைதராபாத், ஆகிய இடங்களில் உயர் தரமான டிஜிட்டல் ஸ்டுடியோக்களை அமைக்கவும், ஏற்கனவே இருந்துவரும் சென்னை, மும்பை ஸ்டுடியோக்கள், இரண்டாம் அடுக்கு நகரங்களான கோயமுத்தூர், மதுரை ஸ்டுடியோக்களையும் மிகப்பெரிய அளவில் விரிவாக்கவும் PhantomFX நிறுவனம் திட்டமிட்டிருப்பதாக திரு.பிஜோய் கூறினார்.
“உலகத்தரத்துடன் கூடிய டிஜிட்டல் ஸ்டுடியோக்களை கனடாவில் உள்ள வான்கோவரிலும், மான்ட்டிரியாவிலும், அமெரிக்காவில் லா ஸ்ஏஞ்சல்சிலும், இங்கிலாந்து துபாய் ஆகிய நாடுகளிலும் அமைப்பதற்கான திட்டங்கள் செயல்பாட்டில் இருக்கின்றன. இவை தவிர சாத்தியமுள்ள மற்ற வெளிநாட்டுச் சந்தைகளை நாடுவதற்கும் பேராவல் கொண்டுள்ள நாங்கள் 10 இலட்சம் அமெரிக்க டாலர்களை முதலீடு செய்ய இருக்கிறோம்” என்றும் ஜோய்ஸ் கூறினார்.
சென்னையிலும் மும்பையிலும் தற்போது 25ஆயிரம் சதுர அடி பரப்பில் அமைந்திருக்கும் ஸ்டுடியோக்கள் அடுத்த ஆண்டு மார்ச் மாதத்திற்குள் ஒரு இலட்சம் சதுர அடி பரப்பளவு கொண்டதாக விரிவாக்கம் செய்யப்படும் என்றார் அவர்.
PhantomFX தன்னுடைய எல்லைகளை விரிவாக்கம் செய்யும் போது திறமையான இந்திய இளைஞர்களுக்கு VFX தொழிலில் வேலைவாய்ப்புகள் பெருமளவில் உருவாகும். மூன்று ஆண்டுகளுக்குள் 2000க்கும் அதிகமான வேலைவாய்ப்புகள் உருவாகும் என்கிறார் பிஜோய். VFX பிரிவில் திறமையுள்ளவர்களை உருவாக்கி வரும் இந்தியாவின் பல்கலைக்கழகங்களுடனும், மற்ற கல்வி நிறுவனங்களுடனும் இணைந்து வேலை நியமனங்கள் வழங்கப்படும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.
திரைப்படங்கள், இணையத் தொடர்கள், விளம்பரங்கள் ஆகியவற்றின் தயாரிப்பு, தயாரிப்புக்கு முந்தைய, தயாரிப்புக்குப் பிந்தைய பணிகள் ஆகியவற்றை தற்போது இந்த நிறுவனம் மேற்கொண்டு வருவதாக PhantomFX நிறுவனத்தின் இயக்குநரும், முதன்மைச் செயல்வினை அலுவலருமான பினு ஜோஷ்வா தெரிவித்தார்.
உள்நாட்டு, பன்னாட்டுத் தயாரிப்புப் பணிகளில் PhantomFX நிறுவனம் பங்கேற்று அவற்றைப் பெருமளவில் வெற்றி பெறச் செய்திருக்கிறது என்றும் அவர் கூறினார். விஜய் நடித்த பீஸ்ட், கமல்ஹாசனின் விக்ரம், ராஜமௌலியின் வீர காவிய அதிரடித் திரைப்படமான RRR, சூர்யாவின் ஜெய்பீம் போன்ற இந்தியாவின் வெற்றிப்படங்கள் பலவற்றிற்கு VFX காட்சிக்கலையை இந்த நிறுவனம் உருவாக்கியிருக்கிறது. பிரம்மாஸ்த்ரா, ஆதிபுருஷ்தே ஆகியனவற்றோடு ஹாலிவுட் திரைப்படங்களுக்கும் இணையத் தொடர்களுக்கும் பிரமிக்க வைக்கும் VFX காட்சிக்கலை அமைப்புகளை உருவாக்கித் தந்திருக்கிறது, இந்தப் பட்டியல் நீண்டு கொண்டே போகக்கூடியது என்று அவர் கூறினார்.
“எண்ணற்ற சேவைகளை வழங் கி தயாரிப்பு நிறுவனங்களுக்கு நாங்கள் ஆதரவளிக்கிறோம். செயற்கை அரங்குகளின் விரிவாக்கம், புழக்கடையில் உயிரினங்கள் ஊர்ந்து செல்லுதல் என்று எதுவாக இருந்தாலும் எங்களுடைய காட்சிக்கலையின் முழுமையான தொகுப்புகள் அந்தக் காட்சிகள் உண்மையாகவே நடப்பது போன்ற அற்புதத்தை நிகழ்த்திக் காட்டுகின்றன என்றார் அவர். சுருக்கமாகச் சொல்வதானால், கனவு உலகங்களை படைத்தளிக்கும் ஆற்றல் எங்களுக்கு இருக்கிறது. கற்பனைக் கதைகள், பழங்கதைகள் ஆகியவற்றிற்கு உயிரூட்ட எங்களால்முடிகிறது என்று பினு ஜோஷ்வா மேலும் கூறினார். படைப்பாக்கச் சேவைகளை உலக நாடுகளுக்கு வழங்கி வரும் இந்தியாவிலேயே மிகச்சிறந்த காட்சிக்கலை அரங்கங்களில் (VFX Studio) ஒன்றாக எங்களைத் தொடர்ச்சியாகக் குறிப்பிட்டுக் கூறி வந்திருக்கின்றனர் என்று அவர் தெரிவித்தார்.
லாஸ்ஏஞ்சல்சில் உள்ள தனது நிர்வாக அலுவலகத்தின் மூலம் தனது ஹோலிவுட் வாடிக்கையாளர்களுக்கு PhantomFX சேவை புரிந்து வருகிறது. “தலை சிறந்தவற்றை அளிக்கும் வகையில் 300க்கும் மேற்பட்ட ஆற்றலும், வலிமையும் மிக்க எங்களது கலைஞர்கள் 24 மணி நேரமும் உழைத்து வருகின்றனர்.” என்றார் அவர். நம்பகமான நெட்வொர்க் கூட்டாளி ( Trusted Partner Network – TPN) என்று சான்று பெற்றுள்ள PhantomFX நிறுவனத்திடம் தரப்படும் எந்தத் தயாரிப்பையும் ஆகச் சிறந்த தாக ஆக்கி அளித்து வருகிறோம். பாதுகாப்பான நம்பகமான கரங்களில் தயாரிப்புகள் ஏந்திக் கொள்ளப்படுகின்றன என்று பினு ஜோஷுவா கூறினார்.
தனிச்சிறப்புமிக்க தன்னுடைய பணிகளுக்காக PhantomFx நிறுவனம் உலகம் முழுவதிலும் ஏற்பினைப் பெற்றுள்ளது. தேசிய அ ளவிலும், சர்வதேச அளவிலும் பல்வேறு விருதுகளை இந்த நிறுவனம் பெற்றுள்ளது. இத்தகைய விருதுகளில்,
• பாங்காக்கில் நடைபெற்ற 13ஆவது சர்வதேச சாதனையாளர்கள் மாநாட்டில் விரைவாக வளர்ந்துவரும் இந்திய நிறுவனத்திற்கான IAC Summit 2019 விருது.
• நிப்பான் பெயிண்ட் பொங்கல் விளம்பரத்திற்காக இந்தியப் பிரிவில்
• திரைப்படம் அல்லாத மிகச்சிறந்த தயாரிப்புக்கான FICCI BAF Awards 2020.
• விளம்பரத்தில் மிகச் சிறந்த காட்சிக்கலைக்கான VAM Awards 2021
நிப்பான் பெயிண்ட் மகிழ்ச்சியான பொங்கல் விளம்பரத்துக்கு. Dangerous என்ற திரைப்படத்திற்கு மிகச்சிறந்த காட்சிக்கலைக்கான (VFX) – VAM Awards 2022 ஆகிய பல விருதுகளும் அடங்கும்.
திரைப்பட, தொலைக்காட்சி உள்ளடக்கத் தயாரிப்பு முன்முயற்சிகளுக்கான உலகளாவிய அமைப்பான Motion Pictures Association of America (MPAA) என்ற அமைப்பு ஏற்றுக்கொண்டுள்ள, நம்பகமான நெட்வொர்க் கூட்டாளி (Trusted Partner Network – TPN) என்ற சான்றிதழை PhantomFX நிறுவனம் பெற்றுள்ளது என்று திரு.பினு ஜோஷ்வா கூறினார்.
PhantomFx நிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரி திரு.ரஜினிகாந்த் கூறும் போது, இந்த நிறுவனம் பொதுமக்களுக்குப் பங்குகளை விற்பனை செய்து நிதி திரட்டுவதற்காக சிறு, நடுத்தர நிறுவனங்களுக்கான SME IPOவிற்குள் முதல் முறையாக அடியெடுத்து வைப்பதற்காக இந்திய தேசிய பங்குச் சந்தையின் NSE-EMERGE தளத்தில் இணைந்துள்ளது. பங்குச்சந்தையின் மூலமாக கணிசமான முதலீட்டைத் திரட்டுவதற்கு நாங்கள் திட்டமிட்டிருக்கிறோம். பங்குச் சந்தையில் நுழையும் முதலாவது தென்னிந்திய VFX நிறுவனம் PhantomFx தான் என்று அவர் தெரிவித்தார்.
PhantomFX Entering into SME-IPO
Phantom Digital Effects Limited (PhantomFX), one of the leading Creative Visual Effects (VFX) Studios in India, creating stunning visual effects for a host of feature films, Web Series, and Commercials, has drawn up massive expansion plans in India and abroad with a total investment of about Rs.40 crs.
“PhantomFX, a Trusted Partner Network (TPN) Certified company, is planning to spread its wings across the globe by setting up high-end digital studios that would elevate our global presence as an industry leader in the next couple of years,” said Mr. Bejoy Arputharaj, Founder, Managing Director, and CEO of Phantom Digital Effects Limited(PhantomFX).
Asserting that the VFX and Animation sector is one of the fast-growing and emerging businesses with the potential to grow tremendously in the future, he said PhantomFX is gearing up to take full advantage of the industry growth and position itself as a premier VFX company globally. The company plans to set up high-end Digital studios in Cochin, Hyderabad, and Tier II cities like Coimbatore & Madurai and a big expansion in the existing location in Chennai & Mumbai in Tamil Nadu, Mr. Bejoy said.
Plans are afoot to establish world-class Digital studios in Vancouver & Montreal in Canada, Los Angeles & Delaware in the USA, the United Kingdom, and Dubai. “We are also ambitious to explore other potential offshore markets,” he said adding, in all, “we will be investing about 1 Million US dollars”.
As the market is growing exponentially, PhantomFX has also decided to expand its present Digital Studio located in Chennai & Mumbai. “Presently, we are operating in a 25,000 sq. ft area and the Studio will be expanded to 1 lakh sq. ft area by March next year,” he said.
While expanding its horizons, PhantomFX would generate substantial employment opportunities in the Visual Effects (VFX) domain, targeting young and dynamic talents in the country. “We will be making available a massive 2,000 plus placements within a period of three years,” Mr. Bejoy said. He also added that the company would be collaborating with Indian Universities and other Educational Institutions that produce Visual Effects (VFX) talent for placements.
On the company’s profile, Mr. Binu Joshua, Director, and COO said PhantomFX is presently contributing to the production, pre & post-production of feature films, web series, and commercials. PhantomFX has made it big in a host of Domestic & International Projects. The company has created Visual Effects (VFX) for Indian Films, which included Vijay’s Beast, Kamal Hassan’s Vikram, Rajamouli’s epic-action drama RRR, Suriya’s Jai Bhim, Brahmastra, and many big upcoming Bollywood movies. The company has also provided stunning Visual Effects to an array of Hollywood movies & Web Series; he said the list is long.
“We support production houses by providing end-to-end services. Our complete package of visual effects does miracles to bring one’s vision to reality, be it set extensions or creating creatures crawling in the backyard,” he said. To put it in a nutshell, “We are capable of creating surreal worlds, breathing life into fantasy and myths,” Mr. Binu Joshua added. Since PhantomFX was established in 2011, he said we have consistently been named among the best VFX Studios in India, providing creative services across the globe.
Mr. Binu Joshua said the company has received the TPN (Trusted Partner Network) Certificate, recognized by the Motion Pictures Association of America (MPAA), a global industry-wide film and television content protection initiative. This is the highest recognition in terms of data security for the VFX industry across the Globe, he said.
He said the company is catering to its clients in Hollywood through its administrative office in Los Angeles. “Our robust and talented team of 350 artists worked round the clock to roll out the best in the industry,” he added. Being a TPN-compliant and certified company, PhantomFX ensures that any production walking through our doors can rest assured that their content is in reliable and secured hands, Mr. Binu Joshua said.
PhantomFX has been globally recognized for its exemplary work and has won several awards from National and International presenters. The awards included
* IAC Summit 2019 – Fastest Growing Indian Company Award in the 13th International Achievers Summit held in Bangkok
* FICCI BAF Awards 2020 – Best Non-Feature Indian Category for Nippon Paint Pongal Advertisement
* VAM Awards 2021 – Best Commercial Visual Effects for Nippon Paint – Happy Pongal
* VAM Awards 2021 – Best VFX Shot Award for Project Blue Book
* VAM Awards 2022 – Best VFX Shot Award for the Movie, Dangerous
Mr. Rajinikanth, Chief Financial Officer at PhantomFX said, the company, as part of raising funds, has decided to enter SME IPO as a fresh Equity Shares to the public for the first time and get listed in the NSE-EMERGE platform. “We are planning to raise a sizeable amount through SME IPO,” he said and adding that PhantomFX is the first South Indian VFX Company to enter SME IPO.
For Phantom Digital Effects Limited.