Sunday, June 4
Shadow

காவல்துறையின் கணிசமான யோசனை

கொரானா வைரஸ் பரவலை தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இன்று 4வது நாள். அதே நேரம் அத்தியாவசிய தேவைகளுக்காக மக்கள் வெளியில் வரலாம் என அறிவிக்கப்பட்டது.

அதே நேரத்தில் காரணமின்றி சும்மா சுற்றும் பலரையும் போலீசார் அடித்து உதைக்கிற காட்சியும், பல இடங்களில் நூதன தண்டனை வழங்கும் காட்சிகளையும் பார்க்க முடிகிறது.

மிக மிக அவசியம் அல்லது அவசரம் என்றால் பயணப்படலாம். அதற்கு காவல்துறை வழி காட்டியுள்ளது.

சென்னையில் இருந்து அவசர தேவைகளுக்கான பயணம் மேற்கொள்ள விரும்புவோர் உரிய காரணங்களுக்காக விண்ணப்பிக்கலாம் என காவல்துறை தெரிவித்துள்ளது.

திருமணம், மருத்துவம், இறப்பு, உள்ளிட்டவற்றுக்காக ஒரு இடத்தில் இருந்து இன்னொரு இடத்திற்கு செல்ல கட்டுப்பாட்டு அறைக்கு விண்ணப்பிக்கலாம்.

7530001100-ல் தொடர்பு கொண்டோ/ எஸ்எம்எஸ்/ வாட்ஸ் அப்பில் தகவல் அளிக்கலாம் என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த காரணங்களுக்காக காவல்துறை சார்பில் அனுமதி பயண கடிதம் வழங்கப்படும்.

இதை தேவைப்படுபவர்கள் பயணம் படுத்திக் கொள்ளவும்.