கொரோனா வைரசுக்கு எதிரான போராட்டத்தில் மத்திய மாநில அரசுகள் போராடி வருகின்றனர்.
இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவை போட்டுள்ளார் மோடி.
மேலும் பிரபலங்கள் நிவாரண நிதியை கொடுக்கலாம் என அறிவித்துள்ளார்.
எனவே தெலுங்கு சினிமா நட்சத்திரங்கள் பலரும் அரசுக்கு உதவ முன்வந்திருக்கின்றனர்.
நடிகர் மகேஷ் பாபு ஒரு கோடி ருபாய் கொடுத்துள்ளார்.
பவர் ஸ்டார் பவன் கல்யாண் இரண்டு கோடி ரூபாய் , ராம் சரண் 70 லட்சம் கொடுத்துள்ளார்.
இந்நிலையில் பாகுபலி நடிகர் பிரபாஸ் அவர்கள் 4 கோடி ரூபாயை தருவதாக அறிவித்துள்ளார்.
பிரதமரின் நிவாரண நிதிக்கு 3 கோடி ரூபாயும், ஆந்திர முதல்வர் நிவாரண நிதிக்கு 50 லட்சம் ரூபாயும், தெலுங்கானா முதலமைச்சர் நிவாரண நிதிக்கு 50 லட்சம் ரூபாயும் வழங்குவதாக அறிவித்துள்ளார்.
ஆக மொத்தம் 4 கோடி ரூபாயை பிரபாஸ் கொடுத்துள்ளார்.
இனி எந்த நடிகரும் இவரை மிஞ்சி கொடுத்துவிட முடியாது என்றே நம்பலாம்.