Thursday, February 13
Shadow

’ராமே ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும்’ விமர்சனம்

 

 

மிதுன் மாணிக்கம், ரம்யா பாண்டியன் , வாணி போஜன் ஆகியோர் நடிப்பில் அரிசில் மூர்த்தி இயக்கத்தில் வெளியாகி இருக்கும் இராமே ஆண்டாலும் இராவணே ஆண்டாலும்

பூச்சேரி  கிராமத்தில் வசிக்கும் தம்பதிகள்  மாணிக்கம் மற்றும் ரம்யா பாண்டியன். இவர்கள் வளர்த்து வரும் காளை வெள்ளையன் மற்றும் கருப்பன் இதை பற்றி யாரும் எது சொன்னாலும் இவர்கள் இருவருக்கும் கடும் கோபம் வந்து விடும். ஒரு கட்டத்தில் இவை இரண்டும் காணாமல் போய்விடுகிறது.

இதை காவல் நிலையத்தில் புகார் அளிக்க செல்லும் இவர்களை திட்டி அந்த  புகாரை ஏற்க மறுக்கிறார்கள் போலீஸ் அதிகாரிகள். தொலைந்த இவர்களின் காளையை எங்கு தேடியும் கிடைக்கவில்லை இந்த தகவலை செய்தியாளரான வாணி போஜன் அறிந்து அதை ஒரு செய்தியாக்கி உலகத்திற்கு வெளிகொண்டுவருகிறார். அதற்குப் பின்னர் காணாமல் போன வெள்ளையனும் – கருப்பனும் கிடைத்தார்களா இல்லையா என்பதுதான் படத்தின் மீதிக்கதை.

நாயகனாக நடித்திருக்கும் மிதுன் மாணிக்கம், அறிமுகம் என்று தெரியாதளவிற்கு நடிப்பில் பளீச்சிடுகிறார். பல இடங்களில் யதார்த்தமான நடிப்பை கொடுத்து இருக்கிறார்.ரம்யா பாண்டியன், கதாபாத்திரத்திற்கு கச்சிதமாக பொருந்தி இருக்கிறார். மாடுகள் மீது அக்கறை காட்டுவது, அவர்களுடன் பழகுவது என நடிப்பில் ஸ்கோர் செய்து இருக்கிறார்.  மக்களின் குறைகளை உலகிற்கு சொல்லும் பத்திரிகையாளர் வேடத்தில் நடித்திருக்கும் வாணி போஜன், கொடுத்த வேலையை நிறைவாக செய்திருக்கிறார்.

பாடலாசிரியர்கள் விவேக், யுகபாரதி, மதங்குமார் ஆகியோரின் வரிகள் மக்களின் செவிகளில் மட்டும் இன்றி மனதிற்குள்ளும் இறங்கும் வகையில் இசையமைத்திருக்கும் கிரிஷ், பின்னணி இசையையும் நேர்த்தியாக கையாண்டுள்ளார்.எம்.சுகுமாரின் ஒளிப்பதிவு அருமை

மாநில அரசியல் தொட்டு ஒன்றிய அரசு வரை விரவி இருக்கும் திட்ட தில்லு முல்லுகளை தோலுரிக்கும் அரிசில் மூர்த்திக்கு அடுத்து பெரிய படங்கள் காத்திருக்கின்றன என்றே சொல்ல வேண்டும். கல்வியும், அரசின் திட்டங்களும் எட்டாத குக்கிராமங்களில் கூட இந்தியின் ஆதிக்கம் பெருகி வருவதைக் காட்டுவது சரியான சூடு.

நல்லது செய்வதாக கூறி ஊழழ் செய்துள்ள அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகளை வெட்ட வெளிச்சம் போட்டுக்காட்டும் ஒரு சிறந்த  திரைப்படம்.