Monday, September 9
Shadow

ராதே ஷ்யாம் விமர்சனம்

 

பாகுபலி படங்களுக்கு பிரபாஸ் நடிப்பில் பல மொழிகளில் வெளியாகியுள்ள திரைப்படம் ராதே ஷ்யாம். நடிகை பூஜா ஹெக்டே கதாநாயகியாகவும், சத்யராஜ், சச்சின், ஜெயராம், ஜெகபதி பாபு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

UV கிரியேஷன்ஸ் பிரமாண்டமாக தயாரித்துள்ளது ராதே ஷ்யாம் திரைப்படம் எந்தளவிற்கு எதிர்பார்ப்பை பூர்த்தி செய்துள்ளது என்பதை இந்த விமர்சனத்தில் பார்ப்போம்.

இந்தியளவில் சக்திவாய்ந்த கைரேகை சோதிடராக திகழ்ந்து வருகிறார் சத்யராஜ், அவரின் சிஷ்யனாகவும் கைரேகை மூலமாக எதிர்காலத்தையே கணிக்கும் விக்ரமாதித்யா கதாபாத்திரத்தில் பிரபாஸ் அறிமுகமாகிறார். சில காரணங்களால் இந்தியாவை விட்டு வெளியேறியுள்ள பிரபாஸ் உலகம் சுற்றும் வாலிபனாக இருந்து வருகிறார்.

காதல், கல்யாணத்தில் விருப்பமில்லாமல் பல பெண்களுடன் சுற்றி வருகிறார் பிரபாஸ், ஆனால் ஒரு நாள் ரயிலில் பூஜா ஹெக்டேவை சந்திக்கும் பிரபாஸ் காதல் வையப்படுகிறார். இத்தாலியில் மருத்துவராக இருந்து வரும் பூஜா ஹெக்டேவை பிரபாஸ் பின்தொடர இருவரும் காதலில் விழுகின்றனர்.

மறுபுறம் தனது எதிர்காலத்தை ஏற்கனவே கணித்துள்ள பிரபாஸ் பூஜா ஹெக்டேவிடம் தான் இருவரும் ஒன்றாக சேரமுடியாது என்ற உண்மையை அவரிடம் கூறுகிறார். பிரபாஸுடன் சேர்ந்து வாழ ஆசைப்பட்ட பூஜா ஹெக்டே சில திடுக்கிடும் முடிவுகளை எடுக்கிறார்.

இதனால் நிலை தடுமாறும் பிரபாஸ் தனது துள்ளிய கணிப்பை தானே முறியடித்து எப்படி பூஜா ஹெக்டேவுடன் ஒன்றாக சேர்கிறார் என்பதே ராதே ஷ்யாம் படத்தின் மீதி கதை.

பிரபலமான கைரேகை ஜோதிடராக வரும் விக்ரமாதித்யா கதாபாத்திரத்தில் தனது நேர்த்தியான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார் நடிகர் பிரபாஸ். படம் முழுக்க நடிகை பூஜாவுடன் காதல் காட்சிகளை அள்ளி தெளித்துள்ளார்.

மருத்துவராகவும் உயிர்கொல்லி நோய்யாலும் பாதிக்கப்படுள்ள பிரேர்னா என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ள பூஜா ஹெக்டே காதல் காட்சிகள் மட்டுமின்றி எமோஷனல் காட்சிகளிலும் ஸ்கோர் செய்துள்ளார். மேலும் மற்ற கதாபாத்திரங்களில் வரும் சத்யராஜ், சச்சின், ஜெயராம் உள்ளிட்டோர் நடிப்பு ரசிக்க வைக்கின்றது.

கதையின் தேர்வும் கதைக்கான திரைக்கதையும் சிறப்பாக வடிவமைத்துள்ளார் இயக்குனர் ராதா கிருஷ்ணகுமார். கடந்த காலத்தில் நடக்கும் கதை என்பதால் அதற்கான வடிவமைப்பை அழகாக படமாக்கியுள்ளார். இயக்குனரின் கதாப்பாத்திர தேர்வு கச்சிதமாக அமைந்துள்ளது.

மனோஜ் பரமஹம்சாவின் ஒளிப்பதிவு படத்திற்கு கூடுதல் பலமளித்திருக்கிறார். சிறப்பான காட்சியமைப்பின் மூலம் கண்களுக்கு விருந்தளித்துள்ளார். ஒவ்வொரு காட்சியும் மனதில் பதியும்படி அற்புதமாக காட்சிப்படுத்தியுள்ளார். ஒளிப்பதிவின் மூலம் பார்வையாளர்களை அந்த இடத்திற்கே அழைத்துச் செல்லும் உணர்வை உருவாக்கியுள்ளார்.

தமனின் பின்னணி இசையும் ஜஸ்டின் பிரபாகரனின் பாடல்களும் படத்திற்கு கூடுதல் பலமாக அமைந்திருக்கிறது. படத்திற்கு ஏற்றவாறு அந்த கதைக்கு தேவைப்பட்டவாறு இசையை கச்சிதமாக உருவாக்கியுள்ளனர்.