Monday, December 9
Shadow

பவன் கல்யாணை பார்த்து ராம் சரண் தேஜா உதவி

கொரோனா நோய் தற்போது உலகம் முழுவதும் பரவியுள்ள நிலையில், இந்தியாவையும் விட்டு வைக்கவில்லை இந்த கொரோனா. இந்த கொரோனா நோய் காரணமாக பிரதமர் நிவாரண நிதிக்கு தெலுங்கு திரையுலகின் பிரபல நடிகரும், அரசியல்வாதியுமான பவன் கல்யாண் ருபாய் 1 கோடி பிரதமர் நிவாரண நிதிக்கு உதவி செய்தார்.

இந்த தகவலை பவன் கல்யாண் தனது ட்விட்டர் பகுதியில் பதிவு செய்தார். இதை அறிந்த பவன் கல்யாணின் அண்ணனும், பிரபல நடிகரும், அரசியல்வாதியுமான சிரஞ்சீவியின் மகனும் நடிகருமான ராம் சரண் தேஜா பிரதமர் நிவாரண நிதிக்கு உதவிக்கரம் நீட்டியுள்ளார்.

ராம் சரண் தேஜா தன்னுடைய அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது, தன்னுடைய சித்தப்பாவான பவன் கல்யாண் முன்வந்தது பிரதமர் நிவாரண நிதிக்கு ருபாய் ஒரு கோடி உதவிக்கரம் நீட்டியுள்ளதை பார்த்து நானும் அவ்வழியில் ருபாய் 70 லட்சம் ஆந்திர அரசு மற்றும் தெலங்கானா அரசு மூலமாக பிரதமர் நிவாரண நித்திக்கு நிதி வழங்க உள்ளதாக தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.