Monday, October 14
Shadow

‘ரங்கோலி’ திரைப்பட ரேட்டிங்: 2.5/5

Casting : Hamresh, Aadukalam Murugadass, Sai Sri Prabhakaran, Akshaya, Prarthana Sandeep, Amit Pargav

Directed By : Vaali Mohan Dass

Music By : Sundramoorthy

Produced By : Gopuram Studios

her child face so much that she cannot be called a heroine. It is not acceptable to cast her in the role of a girl, but to cast her in such a romantic role.Aadukalam Murugadoss, who plays the hero’s father, has done a great job. Her joy when her son’s dream of attending a private school comes true, and at the same time, the disturbing scene when the situation turns out to be the same, draws attention.

 

வடசென்னையில் ஆடை உலர் வெளுப்பக தொழிலை செய்து வரும் உத்தமர் காந்தி (ஆடுகளம் முருகதாஸ்) – காளியம்மா (சாய் ஸ்ரீ பிரபாகரன்) தம்பதிகளுக்கு சத்யா ( ஹமரேஷ்) எனும் மகனுடனும், வேம்பு லட்சுமி ( அக்சயா ) எனும் மகளுடனும் பொருளாதார நிலையில் தன்னிறைவு இல்லாமல் கடனாளியாக வாழ்கிறார்கள்.

குடும்பத்தில் உள்ள அனைவரும் சத்யா மீது மிகுந்த பாசம் வைத்திருக்கிறார்கள். சத்யா அங்குள்ள அரசாங்க அனுசரணையுடன் இயங்கும் பாடசாலையில் ‘ஏ லெவல்’ கல்வி கற்று வருகிறார். ஒருமுறை நண்பர்களுடன் ஏற்பட்ட சிறிய தகராறால்.. இவர்களை காவலர்கள், காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்கிறார்கள்.

காவல் நிலையத்திற்கு குடும்பத்துடன் வரவழைத்து விட்டானே..! என சத்யா மீது அவரது பெற்றோர்கள் கடும் கோபம் அடைகிறார்கள். அத்துடன் உன் உடன் படிக்கும் சக மாணவர்களின் சகவாசம் சரியாக இல்லை என அவர்களே தன்னிச்சையாக அவதானித்து.. சத்யாவை அதிக கட்டணம் வசூலிக்கும் தனியார் பாடசாலை ஒன்றில் சேர்க்கிறார்கள். அங்குள்ள மாணவ மாணவிகளுக்கும், புதிதாக சேர்ந்திருக்கும் சத்யாவிற்கும் இடையே அதே வகுப்பில் படிக்கும் பார்வதி ( பிரார்த்தனா சந்திப்) யுடனான நட்பு மற்றும் காதல் விடயத்தில் மோதல் உருவாகிறது.

அதே தருணத்தில் சத்யாவின் பெற்றோர்கள், சத்யாவின் கல்விச்செலவிற்காக கடுமையாக உழைக்கிறார்கள். சத்யா பாடசாலையை விட்டு, வீட்டுக்கு வருகை தரும் போது தாய், சகோதரி, தந்தை எனும் மூவரில் யாரும் இல்லை. அனைவரும் கஷ்டப்பட்டு உழைக்கிறார்கள். இதனை உணர்ந்து கொள்ளும் சத்யா.. தன் குடும்பத்தினருக்காக எம்மாதிரியான முடிவை மேற்கொள்கிறார்? என்பதுதான் படத்தின் திரைக்கதை.

பள்ளி மாணவர்கள் பற்றிய கதைகள் காதல் கதைகளாகத் தான் பெரும்பாலும் மாறியிருக்கின்றன. ரங்கோலி படம் சற்று மாறுபட்டு சிந்திக்கப்பட்டிருக்கிறது. 15 வயது என்பது மனதை அலைபாயவிடும் காலகட்டம் என்பதால் காதல் காட்சிகள் வைக்கப்பட்டிருந்தாலும் அதையே பிரதானமாக எடுக்காதது ஆறுதல் . புதுமுக ஹீரோ சத்யா கதாபாத்திரத்தில் அறிமுகமாகியிருக்கும் ஹம்ரேஷ் துடிப்பும் சுறுசுறுப்பும் நிறைந்து மனதில் இடம்.பிடிக்கிறார். பார்க்க ஜி வி பிரகாஷை போலவே தெரிகிறார்

தன்னை வேறு பள்ளியில் சேர்க் கப்போவதாக தந்தை முருகதாஸ் கூறியதும் அதற்கு மறுத்து அடம் பிடிக்கும் ஹம்ரேஷ் வேறு வழியில்லாமல் அந்த பள்ளியில் போய்ச் சேர்வதும், நடத்தும் பாடம் புரியாமல் தேர்தலில் குறைந்த மார்க் வாங்குவது, சக மாணவர் களுடன் மோதல் சர்ச்சை என்று நடப்பதால் பழைய பள்ளியின் இனிமையான வாழக்கை சிதைந்து ஹம்ரேஷுக்கு படிப்பதே சுமையாகிப் போவது இதுபோன்ற சூழலில் சிக்கும் எல்லா மாணவர் களுக்கும் உள்ள கஷ்டம்தான்.

காட்சிகளின் பின் புலத்தை உருவாக்குவதிலும் கதாபாத்திரங்களுக்குப் பொருத்தமான நடிக நடிகையரை தேர்வு செய்வதிலும் அவர்களிடம் வேலை வாங்கியதிலும் அசத்தி இருக்கிறார் வாலி மோகன்தாஸ் . எவ்வளவு கஷ்டம் சிக்கலிலும் குடும்ப உறுப்பினர்கள் மேல் பாசம் குறையாத அப்பாவாக ஆடுகளம் முருகதாஸ் சிறப்பு. அவரது மனைவியாக வரும் சாய் ஸ்ரீ யும் நடிப்பு , உடல் மொழிகள், குரல் என்று பிரமாதப் படுத்துகிறார் . மகளாக வரும் அக்ஷயா நிதானமான இயல்பான நடிப்பில் ஈர்க்கிறார் .
பிள்ளைக்கு சூடு போடுவது, டிசி கொடுப்பதாக மிரட்டுவது போன்றவை மறுமுறை திரைக்கதையில் வரும்போது அவற்றை அமைத்து இருக்கும் விதமும் அருமை. ஈவு இரக்கமுள்ள – வட்டிக்கு விடும் நபர் , நவநாகரீக இளைஞராக தமிழ் வாத்தியார் போன்றவை, அடடே வித்தியாசம் . தமிழ் ஆசிரியருக்கு ராவணன் என்ற பெயர் … அருமை. அருமை.

ஒளிப்பதிவாளர் மருதநாயகம் கடற்கரை சாலையில் இரண்டு சக்கர வாகனத்தில் பயணித்தபடி பேசும் காட்சிகளை படமாக்கியதில் ஸ்கோர் செய்கிறார்.
ஆனந்த் மணியின் கலை இயக்கம், சுந்தர மூர்த்தியின் இசை இவையும் படத்துக்கு பக்க பலம் அல்லது பக்கா பலம்.

கதையிலும் தனியார் பள்ளியா, அரசுப் பள்ளியா என்பதை மட்டும் பிரதான விஷயமாகக் கொண்டு, திரைக்கதையிலும் பலமில்லாமல், பாத்திரப் படைப்புகள் நன்கு இருந்தும், கதை எங்கெங்கோ பயணித்து எங்கோ போய் முடிகிறது.

புதுமுகங்களாக சேர்ந்து செய்திருக்கும் முயற்சி. குறைகள் இருந்தாலும் ரங்கோலி கலர்புல் தான்.