சத்தியம் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை மதியம்1:30 மணிக்கு ஒளிபரப்பாகும் புதிய நிகழ்ச்சி “சினிமா பேட்டை”.
உலகில் சினிமா என்பது மிகவும் பிரபலமான பொழுதுபோக்கு ஊடகம். உலகம் முழுவதும் தினமும் மில்லியன் கணக்கான மக்கள் சினிமாவை பொழுதுபோக்கிற்க்காக மட்டுமல்லாமல், ஏகபோகம், சலிப்பு, கவலை மற்றும் வாழ்க்கையின் பல அங்கத்தினை எதார்த்தமாக காட்டுவது தான் சினிமா. அனைத்து உணர்வுகளையும் காட்சிப்படுத்தி, மூன்று மணி நேரத்தில் மொத்த உலக மாயாஜாலத்தினையும் காட்டி ரசிகனை உற்சாக கடலில் ஆழ்த்தும் இந்த சினிமா. உலக சினிமா ஆரம்பித்து உள்ளூர் கோடம்பாக்கம் வரை நடக்கும் அத்தனை சுவாரஷ்ய நிகழ்வுகளையும், கலகலப்பாக உரையாடும் நிகழ்ச்சி தான் “சினிமா பேட்டை”.
இந்த நிகழ்ச்சி திங்கள் முதல் சனி வரை, சத்தியம் தொலைக்காட்சியில் மதியம் 1.30 மணிக்கு ஒளிபரப்பாகிறது. இந்த நிகழ்ச்சியினை விக்னேஷ் தயாரித்து கிறிஸ்டி தொகுத்து வழங்குகிறார்.