Sunday, December 8
Shadow

Sri Vaari Film P. Ranganathan presents Filmmaker M.Rajesh’s directorial Atharva Murali-Aditi Shankar starrer Out-and-Out Entertainer “Production No 5”

Sri Vaari Film P. Ranganathan presents Filmmaker M.Rajesh’s directorial Atharva Murali-Aditi Shankar starrer Out-and-Out Entertainer “Production No 5”

Sri Vaari Film P. Ranganathan, a seasoned film producer and distributor in the industry, has a track record of creating remarkable entertainers. He is now delighted to announce his new project, which marks his first-time collaboration with actor Atharva Murali and Aditi Shankar for a new-age entertainer, directed by filmmaker M.Rajesh, known for his successful movies. Atharva Murali, known for his exceptional performances, will be portraying an entertaining protagonist in this upcoming project tentatively titled ‘Production NO.5’. With Sam CS on board for music composition and Sukumaran handling cinematography, discussions are underway with prominent actors and technicians for the film.

Actor Atharva Murali says, “I am so excited and happy to be collaborating with the finest producer like P. Ranganathan sir, whose experience and journey in the film industry is so vast. His wizardry in choosing, encouraging, and materializing quality entertainers is adorable. I am glad that he has cast his Midas-touch upon the vision of director M.Rajesh’s script, and delighted to be a part of this film. This film will be an out-and-out entertainer for crowds, who come to theatres with the utmost intention of enjoying wholesome entertainment.”

Director M.Rajesh says, “Every industry experiences a change in the phase of creating films with unique genres and treatment. However, Tamil cinema has never changed its course and ritualistic nature of encouraging ‘Entertainer Films’. I feel blessed that audiences have given me the space to explore more into this premise and deliver something that will entertain their theatrical moments. I thank P. Ranganathan sir for this opportunity, and Atharva Murali sir for accepting this script. We are filled with positive vibes about this project, and looking forward to creating an enjoyable entertainer for audiences.”

Producer P. Ranganathan, Sri Vaari Film, says, “As a distributor and producer all over the years, I have witnessed the Tamil audiences unconditionally celebrate the ‘Entertainer’ films that don’t fall into any specific genre. All that they strongly look out for is a decent entertainer that will make their 2-3 hours of cinematic experience completely enjoyable. This is one such film that will endorse entertainment at its best. I am so happy to see that Atharva Murali has retained his sustainability in the industry with his utmost dedication and commendable performance. This film will exhibit his potential in a different dimension as an entertainer. M.Rajesh has created a script that will appeal to audiences of all age groups. I am so happy to work with Aditi Shankar, who has captured the spotlight with her multiple talents, and excellent performance. Currently, M.Rajesh is busy winding up with his project with Jayam Ravi, and we will be soon kick-starting our shooting.”

ஸ்ரீவாரி பிலிம் பி.ரங்கநாதன் வழங்கும் இயக்குநர் எம். ராஜேஷ் இயக்கத்தில், அதர்வா முரளி-அதிதி ஷங்கர் நடிக்கும் அவுட் அண்ட் அவுட் என்டர்டெய்னர் திரைப்படம் ‘புரொடக்‌ஷன் நம்பர் 5’!

ஸ்ரீ வாரி பிலிம் பி. ரங்கநாதன் திரைத்துறையில் அனுபவமிக்க திரைப்பட தயாரிப்பாளர் மற்றும் விநியோகஸ்தராக வலம் வருகிறார். ரசிகர்களுக்குப் பிடித்த வகையிலான எண்டர்டெயின்மெண்ட் படங்களை உருவாக்குவதற்கு பெயர் பெற்ற இவர் இப்போது இயக்குநர் எம். ராஜேஷ் இயக்கத்தில் நடிகர் அதர்வா முரளி மற்றும் அதிதி ஷங்கர் ஆகியோருடன் முதல் முறையாக இணையும் புதிய படத்தை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறார். நியூ ஏஜ் எண்டர்டெயினராக இந்தப் படம் உருவாகிறது. தற்காலிகமாக இந்தப் படத்திற்கு ‘புரொடக்ஷன் நம்பர் 5’ என்று பெயரிடப்பட்டுள்ளது. படத்திற்கு சாம் சிஎஸ் இசையமைக்கிறார் மற்றும் ஒளிப்பதிவை சுகுமாரன் கையாள்கிறார்.

படம் குறித்து நடிகர் அதர்வா முரளி கூறும்போது, ​​“திரையுலகில் மிகுந்த அனுபவமும் கொண்ட பி.ரங்கநாதன் சார் போன்ற சிறந்த தயாரிப்பாளருடன் இணைந்து பணியாற்றுவதில் நான் மிகவும் மகிழ்ச்சியாக உணர்கிறேன். தரமான பொழுதுபோக்கு கதைகளைத் தேர்ந்தெடுப்பதிலும், ஊக்குவிப்பதிலும், அதற்காக செலவு செய்வதிலும் அவருடைய ஈடுபாடு அபாரமானது. இயக்குநர் ராஜேஷின் திரைக்கதைக்கு இவர் தயாரிப்பு செய்து அதில் நான் நடிப்பது பெருமையான விஷயம். முழுக்க முழுக்க எண்டர்டெய்ன்மெண்ட் படங்களை எதிர்பார்த்து திரையரங்குகளுக்கு வருபவர்களை இந்தப் படம் நிச்சயம் ஏமாற்றாது” என்றார்.

இயக்குநர் எம். ராஜேஷ் கூறும்போது, ​​“காலத்திற்கு ஏற்றாற் போல, சினிமாவின் ஒவ்வொரு ஜானரிலும் மாற்றம் ஏற்படும். இருப்பினும், தமிழ் சினிமா ரசிகர்கள் எண்டர்டெயினர் படங்களை ஒருபோதும் கொண்டாடத் தவறியதில்லை. பார்வையாளர்கள் திரையரங்குகளில் அவர்களை மகிழ்விக்கும் இதுபோன்றத் தருணங்களை என் படங்களில் கொடுக்க எனக்கு இடம் கொடுத்ததை நான் பாக்கியமாக கருதுகிறேன். இந்த வாய்ப்பை வழங்கிய பி. ரங்கநாதன் சாருக்கும், கதையில் நடிக்க ஒத்துக் கொண்ட அதர்வா முரளி சாருக்கும் நன்றி. இந்தப் படம் மூலம் ரசிக்கத்தக்க பொழுதுபோக்குப் படத்தைக் கொடுக்க ஆவலுடன் காத்திருக்கிறோம்” என்றார்.

ஸ்ரீவாரி பிலிம் தயாரிப்பாளர் பி.ரங்கநாதன், ​​“இத்தனை வருடங்களில் விநியோகஸ்தராகவும் தயாரிப்பாளராகவும் நான் கவனித்த வரையில் எண்டர்டெயினர் படங்களைத் தமிழ் ரசிகர்கள் நிபந்தனையின்றி கொண்டாடுவதை நேரில் பார்த்திருக்கிறேன். அவர்களின் 2-3 மணிநேர சினிமா அனுபவத்தை முற்றிலும் ரசிக்க வைக்கும் ஒரு கண்ணியமான பொழுதுபோக்கு படத்தை அவர்கள் பெரிதும் எதிர்பார்க்கிறார்கள். அந்த வகையிலான படம்தான் இது. அதர்வா முரளி தனது அர்ப்பணிப்பு மற்றும் திறமையான நடிப்பிற்காகப் பெயர் பெற்றவர். இந்தப் படம் ஒரு பொழுதுபோக்குப் படமாக வித்தியாசமான பரிமாணத்தில் அவரது நடிப்புத் திறனை வெளிப்படுத்தும். அனைத்து வயதினரையும் கவரும் வகையில் ஒரு திரைக்கதையை ராஜேஷ் உருவாக்கியுள்ளார். பல திறமைகள் மற்றும் சிறந்த நடிப்பால் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த அதிதி ஷங்கருடன் இணைந்து பணியாற்றுவதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். தற்போது ஜெயம் ரவியின் படப்பணியில் ராஜேஷ் பிஸியாக இருக்கிறார். அது முடிந்ததும் விரைவில் இதன் படப்பிடிப்பை தொடங்க உள்ளோம்” என்றார்.