ஏஜிஎஸ் எண்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் ‘கோமாளி’ புகழ் பிரதீப் ரங்கநாதன் இயக்கி நடிக்கும் குடும்பத்துடன் ரசிக்கக்கூடிய கலகலப்பான பொழுதுபோக்கு திரைப்படமான ‘லவ் டுடே’ டிரைலரை எஸ் டி ஆர் (சிம்பு) வெளியிட்டார்
நவம்பர் 4 அன்று உலகெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது ‘லவ் டுடே’
தமிழ் சினிமாவின் முன்னணி தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் தயாரித்துள்ள புதிய திரைப்படமான ‘லவ் டுடே’வின் டிரைலரை நடிகர் சிலம்பரசன் (எஸ் டி ஆர்) இன்று வெளியிட்டார். கல்பாத்தி எஸ் அகோரம், கல்பாத்தி எஸ் கணேஷ், கல்பாத்தி எஸ் சுரேஷ் ஆகியோர் தயாரிப்பில் உருவாகியுள்ள இப்படத்தை ‘கோமாளி’ புகழ் பிரதீப் ரங்கநாதன் இயக்கி கதாநாயகனாக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. உலகெங்கும் உள்ள திரையரங்குகளில் நவம்பர் 4 அன்று இப்படம் வெளியாகிறது.
‘லவ் டுடே’ திரைப்படத்தின் கிரியேட்டிவ் தயாரிப்பாளராக அர்ச்சனா கல்பாத்தியும், நிர்வாக தயாரிப்பாளராக எஸ் எம் வெங்கட் மாணிக்கமும் பணியாற்றுகிறார். அனைத்து வயதினரும் குடும்பத்துடன் ரசிக்கக்கூடிய நகைச்சுவை ததும்பும் பொழுதுபோக்கு படமாக ‘லவ் டுடே’ இருக்கும் என்று படக்குழுவினர் தெரிவிக்கின்றனர். இதை மெய்ப்பிக்கும் வகையில் டிரைலரும் அமைந்துள்ளது.
இயக்குநர் பாலாவின் ‘நாச்சியார்’ படத்தில் நடித்த இவானா ‘லவ் டுடே’ படத்தின் நாயகியாகவும், சத்யராஜ், ராதிகா சரத்குமார், யோகி பாபு ஆகியோர் முக்கிய வேடங்களிலும் நடித்துள்ளனர். யுவன் ஷங்கர் ராஜாவின் இசை படத்திற்கு பெரும் பலம் சேர்த்துள்ளது.
‘லவ் டுடே’ படத்திற்கு தினேஷ் புருஷோத்தமன் ஒளிப்பதிவு செய்துள்ளார், பிரதீப் இ ராகவ் படத்தொகுப்பாளராக பணியாற்றியுள்ளார். கலை வடிவமைப்பை எம்கேடி கையாண்டுள்ளார். ‘லவ் டுடே’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் பெரும் ஆர்வத்தை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.
“இன்றைய காதல் மற்றும் 2கே தலைமுறையினர் எதிர்கொள்ளும் உறவு சிக்கல்களைப் பற்றி இப்படம் பேசும். மிகுந்த பொழுதுபோக்கு அம்சங்களோடு பார்வையாளர்களை ‘லவ் டுடே’ ஈர்க்கும்,” என்று படக்குழு கூறுகிறது. ‘லவ் டுடே’ என்ற தலைப்பைப் பயன்படுத்த ஒப்புதல் அளித்த சூப்பர் குட் பிலிம்ஸின் தயாரிப்பாளர் ஆர் பி சௌத்ரி மற்றும் ‘தளபதி’ விஜய் ஆகியோருக்கு தயாரிப்பாளர்கள் நன்றி தெரிவித்துள்ளனர்.
ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் பேனரில் கல்பாத்தி எஸ் அகோரம், கல்பாத்தி எஸ் கணேஷ் மற்றும் கல்பாத்தி எஸ் சுரேஷ் ஆகியோர் தயாரித்துள்ள ‘லவ் டுடே’ படத்தை பிரதீப் ரங்கநாதன் இயக்கி முதன்மை வேடத்தில் நடித்துள்ளார். அர்ச்சனா கல்பாத்தி இப்படத்தின் கிரேயிட்டிவ் தயாரிப்பாளார் ஆவார்.
STR launches trailer of AGS Entertainment-produced fun-filled family entertainer ‘Love Today’ starring and directed by Pradeep Ranganathan of ‘Comali’ fame
‘Love Today’ heads for worldwide theatrical release on November 4
AGS Entertainment, one of the leading production houses of Tamil cinema, is bankrolling a new film titled ‘Love Today’. Produced by Kalpathi S Aghoram, Kalpathi S Ganesh and Kalpathi S Suresh, the film is directed by Pradeep Ranganathan of ‘Comali’ fame. Interestingly, Pradeep Ranganathan is playing the protagonist in this movie. The film’s trailer was today released by actor STR aka Simbu. The film will hit theaters across the world on November 4.
Archana Kalpathi is the Creative Producer of ‘Love Today’, while S M Venkat Manickam is the Executive Producer. According to the team, the film is going to be a fun-filled family entertainer that would be enjoyed by audiences of all age-groups. The trailer stands testimony to this claim.
Ivana who was part of Director Bala’s ‘Naachiyar’ plays the heroine of ‘Love Today’, while Sathyaraj, Radikaa Sarathkumar and Yogi Babu will be seen in key roles. Music is by Yuvan Shankar Raja, who has come up with attractive songs.
Dinesh Purushothaman is the Director of Photography for ‘Love Today’, while Pradeep E Ragav is the Editor. Art department is being taken care of by MKT. The first look posters of the film have already generated huge curiosity.
“The film will talk about today’s love and the relationship issues being faced by the 2K generation. It will be very entertaining and will strike a chord with the audience,” says the team. The makers have thanked producer R B Choudary of Super Good Films and actor ‘Thalapathy’ Vijay for giving nod to use the title ‘Love Today’.
Produced by Kalpathi S Aghoram, Kalpathi S Ganesh and Kalpathi S Suresh on AGS Entertainment banner, ‘Love Today’ is directed by Pradeep Ranganathan who is also playing the lead role. Archana Kalpathi is the Creative Producer.