அமெரிக்காவில் தயாரான தமிழ்த் திரைப்படம் "தி வெர்டிக்ட்" !!
அக்னி எண்டர்டெயின்மெண்ட் (அமெரிக்கா) அதன் சென்னை துணை நிறுவனத்துடன் இணைந்து கோலிவுட்டில் தனது முதல் திரைப்படத்தை அறிவிப்பதில் பெருமிதம் கொள்கிறது. இத்திரைப்படம் முழுக்க முழுக்க அமெரிக்காவின் டெக்சாஸ், ஆஸ்டினில் படமாக்கப்பட்டுள்ளது.
அக்னி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனத்தின் முதல் திரைப்படமாக உருவாகும் "தி வெர்டிக்ட்" கோர்ட்ரூம் டிராமா, திரில்லராக உருவாகியுள்ளது. தயாரிப்பாளர் திரு. பிரகாஷ் மோகன்தாஸ் மற்றும் இயக்குநர் கிருஷ்ணா சங்கர் இருவரும் டெக்சாஸில் வசிப்பவர்கள். இப்படம் முழுக்க முழுக்க அமெரிக்காவின் ஆஸ்டின், டெக்சாஸில் படமாக்கப்பட்ட முதல் சர்வதேச இந்தியத் திரைப்படமாகும். மேலும் ஒரு சுவாரஸ்யமாக, இப்படம் 23 நாட்களில் படமாக்கப்பட்டுள்ளது.
நடிகை சுஹாசினி மணிரத்னம், வரலக்ஷ்மி சரத்குமார், ஸ்ருதி ஹரிஹரன், வித்யுலேகா ராமன் & பிர...