
'அம்மு' திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியீடு
நடிகை ஐஸ்வர்யா லட்சுமி நடிக்கும் 'அம்மு' திரைப்பட ட்ரெய்லர் வெளியீடு
பிரைம் வீடியோவின் முதல் தெலுங்கு ஒரிஜினல் திரைப்படமான 'அம்மு'வில், சாம்பலில் இருந்து பீனிக்ஸ் பறவை போல எழுந்திருக்கும் அம்முவின் பரபரப்பான பயணத்தைப் பாருங்கள்.
சாருகேஷ் சேகர் எழுதி, இயக்கிய 'அம்மு'வில் ஐஸ்வர்யா லட்சுமி, நவீன் சந்திரா மற்றும் சிம்ஹா நடித்துள்ளனர். இந்த அமேசான் ஒரிஜினல், குடும்ப வன்முறையால் பாதிக்கப்பட்ட ஒரு பெண்ணின் பரபரப்பான கதையையும், அவள் அதை விட்டு வெளியேறும் பயணத்தையும் விவரிக்கிறது.
பிரபல திரைப்படத் தயாரிப்பாளர், இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் அதன் கிரியேட்டிவ் தயாரிப்பாளராகவும், ஸ்டோன் பெஞ்ச் தயாரிக்கும் , அமேசான் ஒரிஜினல் திரைப்படம் அம்மு 240+ நாடுகள் மற்றும் பிரதேசங்களில் அக்டோபர் 19 முதல் தெலுங்கில் நேரிடையாகவும், தமிழ், கன்னடம், மலையாளம...