ஆடி தள்ளுபடி, அடுதடுத்த புது திரைப்படங்கள், அறிவிப்புகளால் ரசிகர்களை அசத்தும் ஆஹா ஓடிடி தளம் !!!
ஆடி தள்ளுபடி, அடுதடுத்த புது திரைப்படங்கள், அறிவிப்புகளால் ரசிகர்களை அசத்தும் ஆஹா ஓடிடி தளம் !!!
தமிழகத்தில் தமிழ் மொழிக்கென பிரத்யேகமாக ஆரம்பிக்கப்பட்ட ஆஹா ஓடிடி தளம், ரசிகர்களின் பேராதரவை பெற்று, முன்னணி ஓடிடி தளங்களுக்கு இணையாக வெகு வேகமாக வளர்ந்து வருகிறது. சிறந்த கதைகள் கொண்ட தொடர்கள் மற்றும் வெற்றி திரைப்படங்களால் பார்வையாளர்களை அசத்தி வரும் ஆஹா, அடுத்ததாக பல அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது.
ஆஹா ஓடிடி தளத்தில் இந்த வார புதிய திரைப்படமாக, சமீபத்தில் திரையரங்குகளில் வெளியாகி வெற்றி பெற்ற, நடிகை ஹன்ஷிகா மோத்வானி, சிம்பு நடித்த, “மஹா” படம் வெளியாகிறது. இதனை தொடர்ந்து, இம்மாதம் நடிகர் அருள்நிதி நடிப்பில், வெளியாகும் “டைரி” திரைப்படம், திரையரங்கு ஓட்டத்திற்கு பிறகு விரைவில் ஆஹா தளத்தில் வெளியாகவுள்ளது. இதனையடுத்து மஹத் நடிப்பில் உருவாகி வரும் எமோஜி திரைப்படம் ஆஹா ஒர...