
“ஆதார்” திரைபட ரேட்டிங்: 3/5
சென்னைக்கு பிழைப்புத்தேடி வந்த பச்சமுத்து ( கருணாஸ் ) கட்டிடத் தொழிலாளியாக தனது மனைவி துளசியுடன் ( ரித்விகா ) வேலை பார்த்து வருகிறார். துளசிக்கு பிரசவவலி ஏற்பட்டதால் இரவு நேரத்தில் ஆட்டோ தேடி ஒரு வீட்டின் கதவை தட்டும் போது சரோஜா வெளியே வர பத்தமுத்து அதிர்ச்சியாகி, தன் மனைவி துளசி பிரசவவலியால் துடிப்பதை காண்பித்து கெஞ்ச துளசி ஆட்டோவில் இருவரையும் ஏற்றிச் செல்கிறாள். இங்கே ஒரு Flash Cut … பச்சமுத்து வேலை பார்க்கும் கட்டிடத்தில் ஒரு நாள் இரவு நேரத்தில் சரோஜா தனது கூட்டத்துடன் வந்து கம்பிகளை திருடும் போது பச்சமுத்து அவளை பிடித்து கொடுக்கிறார்.
எழும்பூர் அரசு குழந்தைகள் மருத்துவமனையில் குழந்தைபேறுக்காக அனுமதிக்கப் படுகிறார். அங்கு பெண்கள் வார்டு என்பதால் துளசிக்கு உதவியாக வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாகிறார் சரோஜா ( இனியா ). இந்நிலையில் தான் வேலை பார்க்கும் கட்டத்...