
'ஆற்றல்' திரைப்பட ரேட்டிங்: 2.5/5
விதார்த் நடிப்பில் வெளியாகியுள்ள ஆற்றல் திரைப்படம் எப்படி இருக்கிறது என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.
தமிழ் சினிமாவில் பிரபல நடிகரான விதார்த், ஷிரிதா ராவ், வம்சி கிருஷ்ணா, வித்யூ ராமன், என பலரது நடிப்பில் இன்று வெளியாகியுள்ள திரைப்படம் ஆற்றல். படத்தை கே எல் கண்ணன் இயக்க செவ்வந்தி மூவிஸ் நிறுவனத்தின் சார்பாக ஜே மைக்கேல் தயாரித்துள்ளார்.
படத்தின் கதைக்களம் :
மெக்கானிக்கல் இன்ஜினியர் ஆன விதார்த் ஒரு ஆட்டோமேட்டிக் கார் ஒன்றை உருவாக்க வேண்டும் என ஆசைப்பட்டு அதற்கான வேலைகளில் ஈடுபட்டு வர அவருக்கு கிட்டத்தட்ட 10 லட்சம் ரூபாய் பணம் தேவைப்படுகிறது. இப்படியான நிலையில் வித்தாரத்தின் அப்பா சார்லி 10 லட்சம் ரூபாய் பணத்தை தயார் செய்து எடுத்து வரும்போது மர்ம நபர்கள் சிலர் அவரை கொன்று பணத்தை திருடி விடுகின்றனர்.
...