
ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும் 'சொப்பன சுந்தரி' படத்தின் முன்னோட்டம் வெளியீடு
நடுத்தர சினிமாவையும் ரசிகர்கள் காப்பாற்ற வேண்டும் -
இயக்குநர் மோகன் ராஜா வேண்டுகோள்
சூப்பர் ஸ்டார்களை இயக்குநர்கள் தான் உருவாக்குகிறார்கள்- ஐஸ்வர்யா ராஜேஷ்.
ஹம்சினி என்டர்டெய்ன்மென்ட் , ஹியூ பாக்ஸ் ஸ்டுடியோஸ் ஆகிய பட நிறுவனங்கள் சார்பில் தயாரிப்பாளர்கள் பாலாஜி சுப்பு மற்றும் விவேக் ரவிச்சந்திரன் ஆகியோர் ,அஹிம்சா என்டர்டெய்ன்மென்ட் எனும் நிறுவனத்துடன் இணைந்து தயாரித்திருக்கும் 'சொப்பன சுந்தரி' எனும் திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது. இதனை தென்னிந்திய திரையுலகின் முன்னணி நட்சத்திர இயக்குநரும், நடிகருமான மோகன் ராஜா வெளியிட்டார்.
'லாக்கப்' எனும் திரைப்படத்தை தொடர்ந்து இயக்குநர் எஸ். ஜி. சார்லஸ் இயக்கத்தில் தயாராகி இருக்கும் புதிய திரைப்படம் 'சொப்பன சுந்தரி'. இந்த திரைப்படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ...