‘காட்டேரி’ திரைப்பட விமர்சனம்
'காட்டேரி' திரைப்பட ரேட்டிங்: 2/5
நடிப்பு: வைபவ், ஆத்மிகா, வரலட்சுமி சரத்குமார், சோனம் பஜ்வா, கருணாகரன், ரவி மரியா, குட்டி கோபி மற்றும் பலர்
இயக்கம்: டி.கே.
தயாரிப்பு: ‘ஸ்டூடியோ கிரீன்’ சார்பில் ஞானவேல் ராஜா
இசை: எஸ்.என்.பிரசாத்
ஒளிப்பதிவு: பி.எஸ் வினோத்
மக்கள் தொடர்பு: யுவராஜ்
”கிணறு வெட்ட, பூதம் கிளம்பியது போல” என்றொரு முதுமொழி தமிழில் இருக்கிறது. இதிலுள்ள ’பூத’த்தை ’காட்டேரி’யாக மாற்றி, “கிணறு வெட்ட, காட்டேரி கிளம்பி வந்தால் என்ன ஆகும்?” என்பதை ஒருவரிக் கதையாக்கி, இந்த ‘காட்டேரி’ படக்கதையை அமைத்திருக்கிறார்கள். ’அடல்ட் காமெடி – திகில் – திரில்லர்’ ஜானரில் இதன் திரைக்கதையை உருவாக்கியிருக்கிறார்கள்.
கதை என்னவென்றால், நாயகன் வைபவ்வின் நண்பன் ஒருவன், நைனா என்ற டானிடம் தனது கூட்டாளிகளை சிக்க வைத்துவிட்டு, தான் மட்டும் தங்கப் புதையலைத் தேடிச் செல்கிறான். அவனையும், தங்க...