Thursday, March 23
Shadow

Tag: ‘காரி’ திரைப்பட விமர்சனம்

Movie Review
'காரி' திரைப்பட ரேட்டிங்: 3.5/5 ராமநாதபுரம் மாவட்டத்தில் காரியூர் - சிவனேந்தல் என்ற 2 கிராமங்களுக்குப் பொதுவான கோயில் ஒன்று இருக்கிறது. அதன் நிர்வாகத்தைக் கைப்பற்றுவதில் 2 கிராமத்துக்கும் போட்டி. ஜல்லிக்கட்டு நடத்தி அதில் வெற்றி பெறும் ஊருக்கு, கோயில் நிர்வாகத்தைக் கொடுப்பது என முடிவாகிறது. இதற்காக, சென்னையில் செட்டிலாகிவிட்ட வெள்ளைச்சாமியை (ஆடுகளம் நரேன்) தேடி வருகிறார்கள், கிராமத்துப் பெரியவர்கள். குதிரை ஜாக்கியான அவர் மகன் சேது (சசிகுமார்), பெரியவர்களோடு ஊருக்கு வருகிறார். அவர் ஜல்லிக்கட்டில் கலந்து கொண்டாரா, கோயில் நிர்வாகம் யார் கைக்குச் சென்றது என்பதைச் சொல்கிறது படம். மனிதனுக்கும் விலங்குக்குமான உறவு, ஜல்லிக்கட்டு மாடுகளின் இறைச்சிக்கு அலையும் கார்ப்பரேட் கூட்டம், குடும்பத்தில் ஒருவராக வாழ்ந்து கொண்டிருக்கும் காளைகள் மீதான பாசம், ஆயுதம் தாங்கி சிலையாக நிற்கும் ஊர் காக்கும் கருப்...