
‘குருதி ஆட்டம்’ திரைப்பட விமர்சனம்
'குருதி ஆட்டம்' திரைப்பட ரேட்டிங்: 2/5
நடிகர்கள்: அதர்வா, பிரியா பவானி ஷங்கர், ராதிகா சரத்குமார், ராதாரவி மற்றும் பலர்.
இசை: யுவன் ஷங்கர் ராஜா
ஒளிப்பதிவு: தினேஷ் புருஷோத்தமன்
எடிட்டிங்: அனில் கிரிஸ்
தயாரிப்பு: Rock Fort Entertainment
இயக்கம்: ஸ்ரீ கணேஷ்.
பல தடைகளைத் தாண்டி அதர்வா நடிப்பில் வெளியாகியுள்ள குருதி ஆட்டம் திரைப்படம் எப்படி உள்ளது என்று பார்க்கலாம். எட்டு தோட்டாக்கள் திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து ஸ்ரீ கணேஷ் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் குருதி ஆட்டம். இந்த படத்தில் அதர்வா, பிரியா பவானி சங்கர் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ராக்போர்ட் இன்டர்நேஷனல் சார்பில் டி. முருகானந்தம் தயாரித்துள்ள இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இப்படத்தில் ராதிகா சரத்குமார், ராதா ரவி, வினோத் சாகர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.மதுரையை மையமாக கொண்டு உருவாகியு...