
'குழலி' திரைப்பட ரேட்டிங்: 2.5/5
மண் மணத்துடன் மனிதர்களையும், கிராமிய வாழ்க்கையையும் அங்கே வலிந்து திணிக்கப்பட்ட சாதிய கொடுமைகளை இன்னும் தூக்கிப் பிடிக்கும் அவலத்தையும் உணர்வும், உணர்ச்சியுமாகப் பதிவு செய்திருக்கிறார் இயக்குனர் சேரா. கலையரசன்.
இந்தப் படத்தின் இயக்குனர் சேரா கலையரன் அப்படி ஒரு கிராமிய வாழ்வியலை இந்த ‘குழலி’யில் திரை முழுவதும் குழைத்துத் தந்திருக்கிறார். அவரது எண்ணங்களை திரையில் அப்படியே தங்களது நடிப்பால் இயல்பாய் பதிவு செய்திருக்கிறார்கள் நடித்திருப்பவர்கள்.
https://youtu.be/qhV4dUE2564
திண்டுக்கல் அருகாமையில் உள்ள கிராமத்தில் உயர் சாதியைச் சேர்ந்தவர் ஆரா. அவருக்கும் அவரை விட பிற்படுத்தப்பட்ட சாதியைச் சேர்ந்த விக்னேஷ் உடன் சிறு வயதில் பள்ளியில் படிக்க ஆரம்பித்த காலத்திலிருந்தே நட்பு. 12வது வகுப்பு படிக்கும் போது அந்த நட்பு காதலாக வளர்ந்து நிற்க...