
'கோப்ரா' பட ரேட்டிங்: 3/5
பிரபல நடிகர் விக்ரம் நடிப்பில் இயக்குநர் அஜய்ஞானமுத்து இயக்கத்தில் இன்று வெளியாகியிருக்கும் திரைப்படம் ‘கோப்ரா’
அஜய் ஞானமுத்து இயக்கத்தில் சியான் விக்ரம் நடிப்பில் மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கிடையே இன்று வெளிவந்திருக்கும் கோப்ரா திரைப்படம் எப்படி இருக்கிறது என்று முதல் பார்வையில் காண்போம்.
கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகளுக்கு மேலாக தயாராகி வந்து இறுதியாக இன்று திரைப்படம் வெளிவந்திருக்கிறது. இத்திரைப்படத்தின் ட்ரெய்லர் கொடுத்த எதிர்பார்ப்பை முதல் பாதியிலேயே இயக்குனர் கொடுத்து விடுகிறார். இப்படத்திற்கு மிகப்பெரிய பலம் சியான் விக்ரம் அவர்களின் மிரட்டலான நடிப்பு. பல கேரக்டரில் வந்தாலும் ஒவ்வொரு கேரக்டருக்கும் தனித்தனியாக அவர் மெனக்கெட்டிருப்பது திரையில் நன்றாக தெரிகிறது. ஒவ்வொரு கேரக்டருக்கும் அவர் கொடுத்திருக்கும் வித்தியாசமான குரல்கள் மற்றும் உடல் மொழி மூலம் தான்...