‘ஜோதி’ திரைப்பட விமர்சனம்
'ஜோதி'திரைப்பட ரேட்டிங்: 4/5
தயாரிப்பாளர் எஸ்.பி.ராஜா சேதுபதி தயாரித்ததோடு ஒரு முக்கியமான கதாபாத்திரத்திலும் நடித்திருக்கும் படம் ஜோதி.
ஜோதி படத்தில் வெற்றி, ஷீலா ராஜ்குமார், கிரிஷா குரூப், இளங்கோ குமரவேல், ‘மைம்’ கோபி, சாய் பிரியங்கா ருத், ராஜா சேதுபதி, ஆகியோர் நடித்துள்ளனர்.
எழுத்து, இயக்கம் – A.V.கிருஷ்ண பரமாத்மா, ஒளிப்பதிவு – செசி ஜெயா, இசை – ஹர்ஷவர்தன் ரமேஷ்வர், படத் தொகுப்பு – சத்யமூர்த்தி, பாடல்கள் – கார்த்திக் நேத்தா,
https://youtu.be/DHFfDN7FSkM
நிறைமாத கர்ப்பிணியான ஜோதிக்கு(ஷீலா ராஜ்குமார்) குழந்தைப்பேறு பெற இன்னும் சில நாட்களே உள்ள சூழ்நிலையில், இரவு நேரத்தில் அவருடைய வயிற்றிலிருந்து ஆபரேஷன் மூலம் குழந்தை எடுக்கப்பட்டு திருடப்படுகிறது ஷீலாவின் எதிர் வீட்டில் குடியிருப்பவர் கதாநாயகன் வெற்றி. அவரது மனைவி க்ரிஷா குரூப் இவர்களுக்கு குழந்தை இல்லை. நிறைமாத கர்ப்பிணியாக இர...