டப்பிங் ஆர்டிஸ்ட்ஸ் பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டியில் வெற்றிவாகை சூடிய வலிமை 11ஸ் அணி
டப்பிங் ஆர்டிஸ்ட்ஸ் பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டியில் வெற்றிவாகை சூடிய வலிமை 11ஸ் அணி
தென்னிந்திய திரைப்பட தொலைக்காட்சி கலைஞர்கள் மற்றும் டப்பிங் கலைஞர்கள் சங்கத்தின் (SICTADAU) டப்பிங் ஆர்டிஸ்ட்ஸ் பிரீமியர் லீக்கின் (DPL) SICTADAU கோப்பைக்கான கிரிக்கெட் போட்டி ஜூலை 30 மற்றும் 31 ஆகிய தேதிகளில் நடைபெற்றது.
அவெஞ்சர்ஸ், டப்பிங் சூப்பர் கிங்ஸ், டோலிவுட் டைகர்ஸ், வலிமை 11ஸ் ஆகிய நான்கு அணிகள் இப்போட்டியில் மோதின. இரண்டு நாட்கள் நடைபெற்ற பரபரப்பான போட்டியின் முடிவில் வலிமை 11ஸ் வெற்றிபெற்றது.
டோலிவுட் டைகர்ஸ் இரண்டாவது இடம், டப்பிங் சூப்பர் கிங்ஸ் மூன்றாவது இடம் மற்றும் அவெஞ்சர்ஸ் நான்காம் இடம் பெற்றனர்.
தென்னிந்திய திரைப்பட தொலைக்காட்சி கலைஞர்கள் மற்றும் டப்பிங் கலைஞர்கள் சங்கத்தால் அதன் உறுப்பினர்களுக்காக இந்த கிரிக்கெட் போட்டி நடத்தப்பட்டது.
2018-ஆம் ஆண்டு முதல், டப்பிங் யூ...