Friday, January 17
Shadow

Tag: தக் லைஃப் திரைப்படத்தில் சிலம்பரசன் டிஆர் நடிக்கிறார்

News
தக் லைஃப் திரைப்படத்தில் சிலம்பரசன் டிஆர் நடிக்கிறார் உலகநாயகன் கமல்ஹாசன் நடித்த விக்ரம் படம் உலகளாவிய வசூல் சாதனையுடன் பெருவெற்றி பெற்றதைத் தொடர்ந்து அவரது "தக் லைஃப்" திரைப்படத்தின் பெயர் அறிவிக்கப்பட்டது முதல் ரசிகர்கள் மத்தியில் உச்சகட்ட எதிர்பார்ப்பும் ஆர்வமும் உருவாகியுள்ளன. 1987-ஆம் ஆண்டு வெளியான க்ளாசிக்கான "நாயகன்" திரைப்படத்திற்குப் பிறகு, இயக்குனர் மணிரத்னம் அவர்களுடன் உலகநாயகன் கமல்ஹாசன் "தக் லைஃப்" படத்தில் மீண்டும் இணைகிறார். வெற்றிகரமான கலைஞர்கள் பலர் இணைந்து பணியாற்றும் இந்தத் திரைப்படத்தின் நட்சத்திர அணிவகுப்பு ஒவ்வொரு நாளும் மேலும் மெருகேறி வருகிறது. தற்போது நடிகர் சிலம்பரசன் டிஆர் இணைந்திருப்பது ரசிகர்கள் மத்தியில் உற்சாக அலையை ஏற்படுத்தியுள்ளது. உலகநாயகன் கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேசனல், மெட்ராஸ் டாக்கீஸ், ரெட் ஜெயண்ட் மூவீஸ், ஆர்.மகேந்திரன், மற்றும்...