தி கேரளா ஸ்டோரி திரைப்படம் டிஜிட்டலில் வெளியான இரண்டு வாரத்தில் ZEE5 இல் 300 மில்லியன் நிமிடங்களைக் கடந்து சாதனை !!
இந்தியாவின் மிகப்பெரிய முன்னணி வீடியோ ஸ்ட்ரீமிங் தளம் மற்றும் பன்மொழி கதைசொல்லியான ZEE5 தளம்,
சமீபத்தில் தி கேரளா ஸ்டோரி திரைப்படத்தினை, உலகளவில் டிஜிட்டல் வெளியீடு செய்தது. இப்படம் தென்னிந்தியப் பிராந்தியத்தில் குறிப்பிடத்தக்கச் சாதனையைச் செய்துள்ளது. உண்மைச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட இப்படம், ஒரு அழுத்தமான படைப்பாக அனைவராலும் பாராட்டைப் பெற்றது. பிப்ரவரி 16 ஆம் தேதி உலகம் முழுக்க டிஜிட்டல் வெளியீடாக வெளியான இப்படம், வெளியான இரண்டு வாரங்களுக்குள் 300 மில்லியன் பார்வை நிமிடங்களைத் தாண்டியது மட்டுமல்லாமல், இந்திய நாட்டின் தென் பகுதியில் குறிப்பாகத் தெலுங்கானா, கேரளா, கர்நாடகா, தமிழ்நாடு மற்றும் ஆந்திராவில் அதிகம் பார்க்கப்பட்ட ஹிந்தித் திரைப்படமாகச...